Skip to main content

உறைபனியின் மேலே ஐஸ் கிரிக்கெட்! சிக்ஸர்கள் பறக்கவிட்ட சேவாக்!!

Published on 12/02/2018 | Edited on 13/02/2018

சுவிட்சர்லாந்து நாட்டில் நேற்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கலந்துகொண்ட ஐஸ் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. பனிமழை பொழியும் கடினமான சூழலில் நடைபெற்ற இந்தப் போட்டியில், உலக கிரிக்கெட் ரசிகர்களை கைவசம் வைத்திருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கலந்துகொண்டனர்.

 

Shewag

 

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ளது செயிண்ட் மோரிட்ஸ் நதி. அதிக உறைநிலையின் காரணமாக இந்த நதி உறைந்து, கடினமாக உள்ள சூழலில், இந்த கிரிக்கெட் போட்டி நடத்தப்படும். அதாவது, இந்தக் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 1988ஆம் ஆண்டு முதல் அங்கு விளையாடப்பட்டு வருகின்றன. உறைந்திருக்கும் நதி 200 டன் எடையைத் தாங்கும் சக்தி கொண்டதாக இருக்கும். அதில், விளையாடுவதற்கான களம் அமைக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு போட்டிகள் நடைபெறும். 

 

இந்த ஆண்டு விரேந்தர் சேவாக் தலைமையிலான டைமண்ட்ஸ் அணியும், சாகித் அஃப்ரிடி தலைமையிலான ராயல்ஸ் அணியும் மோதின. இதில் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. வெற்றி, தோல்வி என்பதைத் தாண்டி பல மூத்த வீரர்கள் கலந்துகொண்டதால், இந்தப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இந்தப் போட்டியில் சேவாக் 31 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். அதில் ஐந்து சிக்ஸர்கள் பறக்கவிட்டது குறிப்பிடத்தக்கது.