team india

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட்தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த தொடரின்முதல் போட்டியில், இங்கிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா, இங்கிலாந்தை வீழ்த்தி முதல் டெஸ்டில் அடைந்ததோல்விக்குப் பதிலடி கொடுத்தது. இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிராகக் கடைசிஇரு டெஸ்டுகளில் விளையாடும்17 பேர்கொண்ட அணியைஇந்தியகிரிக்கெட்வாரியம் இன்று அறிவித்துள்ளது.

Advertisment

இந்த அணியில்ஹர்திக் பாண்டியாஇடம்பெற்றுள்ளார். நீண்டஇடைவெளிக்குப் பிறகு அவர் டெஸ்ட் அணிக்குத் திரும்புகிறார். ஷர்துள்தாக்குர் அணியில்இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஆஸ்திரேலிய தொடரின்போது காயமடைந்த உமேஷ்யாதவ் அணிக்குத் திரும்பியுள்ளார். அதேபோல்அந்த தொடரில்காயமடைந்த கே.எல்.ராகுலும் அணியில்இடம்பெற்றுள்ளார். மேலும் ஷபாஸ்நதீம்அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்திற்கு எதிரானகடைசிஇரண்டுடெஸ்டிற்கான இந்திய அணி வருமாறு:

Advertisment

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, மாயங்க் அகர்வால், சுப்மன் கில்,புஜாரா, அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, சிராஜ்.