Skip to main content

“எங்க அம்மா அப்பவே சொன்னாங்க” - ஐபிஎல் ஏலம் குறித்து தினேஷ் கார்த்திக்!

Published on 19/02/2021 | Edited on 19/02/2021

 

dinesh karthik

 

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது விரைவில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி சிறிய அளவிலான ஏலம், நேற்று (18.02.2021) சென்னையில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 292 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. யாருமே எதிர்பார்க்காத வகையில் வேகப்பந்து வீச்சாளர்கள் பெரிய விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.

 

கிறிஸ் மோரிஸ் ரூ.16.25 கோடிக்கும், ஆஸ்திரேலிய வீரர் ஜேய் ரிச்சர்ட்சன் ரூ.14 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் கைல் ஜேமீசன் 15 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். அதேபோல் ரிலே மெரிடித் 8 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர்கள் பெரிய விலைக்கு வாங்கப்பட்டுள்ளது தொடர்பாக கிரிக்கெட் வீரர்கள், நகைச்சுவையாக பதிவிட்டுள்ளனர்.

 

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், "எனது அம்மா என்னை வேகப்பந்து வீச்சாளராக ஆகுமாறு கூறினார். நான் எனது தந்தை சொல்வதைக் கேட்டேன். எனது அம்மாவிற்கு ஒரு பார்வை இருந்தது. அது சரியானது, இல்லையா?" என தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

 

அதேபோல் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் சாம் பில்லிங்ஸ், “எனது காதலி சாரா என்னிடம், நீ ஏன் பந்து வீச்சாளராகவில்லை எனக் கேட்கிறார்” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

Next Story

ஐபிஎல் 2024 ஏலம் எப்போது? ; வெளியான புது அப்டேட்

Published on 27/10/2023 | Edited on 27/10/2023

 

When is IPL 2024 auction? ; New update released

 

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர் 2008 முதல் நடந்து வருகிறது. அதன் 17 ஆவது சீசன் 2024 இல் நடக்க உள்ளது. இனி ஒவ்வொரு வருடமும் வீரர்கள் ஏலம் நடக்கும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில், அது எப்போது நடக்கும் என்கிற தகவல் தற்போது கசிந்துள்ளது. பெரும்பாலும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் ஐபிஎல் ஏலம் நடக்கலாம் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. முதல் முறையாக இந்தியாவிற்கு வெளியில் ஐபிஎல் ஏலமானது நடக்க உள்ளது. தக்கவைக்கப்பட்ட அணி வீரர்களின் பட்டியலை கொடுக்க கடைசி தேதி நவம்பர் 10 எனவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏலத்தில் பதிவு செய்த வீரர்களின் பட்டியல் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு அணியும் 100 கோடி வரை ஏலத்தில் பயன்படுத்தலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது கடந்த ஐபிஎல் ஏலத்தை விட 5 கோடிகள் அதிகமாகும்.

 

ஐபிஎல் 2023 இல் பயன்படுத்தியது போக மீதமுள்ள தொகை எனப்படும் அணிகளின் பர்ஸ் தொகையில் பஞ்சாப் கிங்ஸ் அணி அதிகமான தொகை வைத்துள்ளது. அதிகபட்சமாக பஞ்சாப் அணி 12.20 கோடிகள் வைத்துள்ளது. ஐபிஎல் அணிகளில் குறைந்தபட்ச பர்ஸ் தொகையாக மும்பை இந்தியன்ஸ் அணி 5 லட்சத்தை வைத்துள்ளது. சன்ரைசர்ஸ் 6.55 கோடிகளும், குஜராத் மற்றும் டெல்லி அணிகள் 4.45 கோடிகளும், லக்னோ அணி 3.55 கோடிகளும், ராஜஸ்தான் ராயல்ஸ் 3.35 கோடிகளும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 1.75 கோடிகளும், கொல்கத்தா அணி 1.65 கோடிகளும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1.5 கோடிகளும் கொண்டுள்ளது.

 

ஐபிஎல் 2023 ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர், பஞ்சாப் கிங்ஸ் அணியின் சாம் கரன் ஆவார். இவர் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 18.5 கோடிகளுக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் ஆவார். இவரைத் தாண்டி ஐபிஎல் 2024 ஏலத்தில் எந்த வீரரும் எடுக்கப்படுவாரா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது.

- வெ.அருண்குமார் 

 

 

 

Next Story

"படத்தின் முதல் காட்சியே போதும்... வெற்றிமாறன் ஒரு ஜீனியஸ் என்பதற்கு " - பிரபல கிரிக்கெட் வீரர் புகழாரம்

Published on 08/04/2023 | Edited on 08/04/2023

 

dinesh karthik praises vetrimaaran in viduthalai

 

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'விடுதலை பாகம் 1' படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். காவல்துறைக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசியிருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படம் பார்த்த அரசியல் தலைவர்கள் திருமாவளவன் எம்.பி, சீமான் உள்ளிட்டோர் படக்குழுவினரை பாராட்டியிருந்தனர். 

 

இப்படம் வெற்றி பெற்றதை அடுத்து தயாரிப்பாளர் எல்ரெட் குமார், இயக்குநர் வெற்றிமாறன் அடுத்ததாக சூரி உள்ளிட்டோர் இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழில் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கில் அல்லு அரவிந்த் வெளியிடுகிறார். வருகிற 14 ஆம் தேதி வெளியிடவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனிடையே மக்களுக்கு நன்றி தெரிவித்து விடுதலை 2 விரைவில் வரும் என சூரி அறிக்கை வெளியிட்டிருந்தார். சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து சக்சஸ் மீட் நடத்தியது படக்குழு. இதில் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்ளிட்ட பலரும் படத்தின் அனுபவங்களைப் பகிர்ந்து அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர். 

 

இதனை தொடர்ந்து ரஜினிகாந்த், படத்தை பார்த்து நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் "இதுவரை தமிழ்த் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக் காவியம்" என அவரது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியிருந்தார். இதற்கு சூரி, "யார பார்த்து பிரமிச்சு சினிமாவுக்கு வரணும்னு நினச்சேனோ அவர் எங்கள் படைப்பையும் உழைப்பையும் பாராட்டி பேசிய தருணம் வாழ்க்கை முழுமை அடைஞ்சதா உணர்றேன்" என நெகிழ்ச்சியுடன் ரஜினிக்கு நன்றி தெரிவித்தார். 

 

இதனிடையே பல்வேறு தரப்பிடமிருந்தும் விடுதலை படத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் விடுதலை பார்த்து படக்குழுவினரை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "வெற்றிமாறன், நீங்கள் ஒரு ஜீனியஸ். ஒரு அழுத்தமான கதையில் மனிதர்களின் எமோஷனை யதார்த்தமாக திரையில் காண்பித்துள்ளார். படத்தின் முதல் ரயில் விபத்து காட்சி அவர் தொழில்நுட்ப ரீதியாக ஜீனியஸ் என்பதை காண்பிக்கிறது" எனக் குறிப்பிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார். இதற்கு சூரி நன்றி தெரிவித்துள்ளார்.