Skip to main content

“எங்க அம்மா அப்பவே சொன்னாங்க” - ஐபிஎல் ஏலம் குறித்து தினேஷ் கார்த்திக்!

Published on 19/02/2021 | Edited on 19/02/2021

 

dinesh karthik

 

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது விரைவில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி சிறிய அளவிலான ஏலம், நேற்று (18.02.2021) சென்னையில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 292 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. யாருமே எதிர்பார்க்காத வகையில் வேகப்பந்து வீச்சாளர்கள் பெரிய விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.

 

கிறிஸ் மோரிஸ் ரூ.16.25 கோடிக்கும், ஆஸ்திரேலிய வீரர் ஜேய் ரிச்சர்ட்சன் ரூ.14 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் கைல் ஜேமீசன் 15 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். அதேபோல் ரிலே மெரிடித் 8 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர்கள் பெரிய விலைக்கு வாங்கப்பட்டுள்ளது தொடர்பாக கிரிக்கெட் வீரர்கள், நகைச்சுவையாக பதிவிட்டுள்ளனர்.

 

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், "எனது அம்மா என்னை வேகப்பந்து வீச்சாளராக ஆகுமாறு கூறினார். நான் எனது தந்தை சொல்வதைக் கேட்டேன். எனது அம்மாவிற்கு ஒரு பார்வை இருந்தது. அது சரியானது, இல்லையா?" என தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

 

அதேபோல் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் சாம் பில்லிங்ஸ், “எனது காதலி சாரா என்னிடம், நீ ஏன் பந்து வீச்சாளராகவில்லை எனக் கேட்கிறார்” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.