Skip to main content

ஜடேஜாவின் கேப்டன்ஸி குறித்து தோனி அதிரடி கருத்து! 

Published on 02/05/2022 | Edited on 02/05/2022

 

dhoni Action Comment on Jadeja's Captaincy!

 

போட்டியின் போது ஒரு கேப்டன் எப்படி செயல்பட வேண்டும் என ஒவ்வொரு விஷயத்தையும் ஸ்பூனில் எடுத்து ஊட்டுவது போல சொல்லித் தந்து கொண்டிருக்க முடியாது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். 

 

சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்ற பின், அந்த அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பல்வேறு விஷயங்கள் குறித்த தனது கருத்துகளைத் தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை அடுத்தாண்டு தான் ஏற்கும் நிலை வரலாம் என்று கடந்த ஆண்டே ஜடேஜாவுக்கு தெரியும். இதன் மூலம் தலைமைப் பதவிக்கு தயாராவதற்கான அவகாசம் கிடைத்ததாகவும் கூறினார். ஜடேஜா கேப்டனாக இருந்த முதல் இரண்டு போட்டிகளிலும் அவரது பணியை தான் மேற்பார்வைச் செய்தேன். 

 

இதன் பின் வந்த போட்டிகளின் போது, ஜடேஜா சொந்தமாக முடிவெடுக்க வேண்டும் என்று அவரை வலியுறுத்தியதாகத் தெரிவித்த தோனி, போட்டியில் ஒவ்வொரு விஷயத்திலும் எப்படி செயல்பட வேண்டும் என ஸ்பூனில் எடுத்து ஊட்டுவது போல  சொல்லித் தந்து கொண்டிருக்க முடியாது. அது ஒரு கேப்டனுக்கு நல்லதல்ல; கேப்டன் பொறுப்பு ஜடேஜாவின் ஆட்டத் திறனைப் பாதித்ததாகக் கருதுவதாகவும் தோனி கூறினார். 

 

Next Story

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
New captain appointed for Chennai Super Kings team

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி நாளை (22.03.2024) முதல் ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.

அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் மோதுகிறது. 9வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி 2 ஆம் கட்ட அட்டவணை விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

New captain appointed for Chennai Super Kings team

இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக இதுவரை 5 சாம்பியன் கோப்பைகளை பெற்று கொடுத்த தோனி தனது கேப்டன் பொறுப்பை விட்டுக் கொடுத்துள்ளார். ஐபிஎல் - 2024 கோப்பையுடன் அனைத்து அணிகளின் கேப்டன்களும் நிற்கும் புகைப்படத்தை ஐபிஎல் நிர்வாகம் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் தோனி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தோனியின் 13 ஆண்டுகால சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. 

Next Story

ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு! 

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
IPL Release of schedule for matches

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஐ.பி.எல். தொடரின் முதல் 17 நாட்களுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை   21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.

அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22 இல் நடைபெறும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, - பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. 9 வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு 2 ஆம் கட்ட அட்டவணை வெளியாகும் எனக் கூறப்படுகிறது.