Published on 22/09/2021 | Edited on 22/09/2021

கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 20/09/2021 அன்று துபாயில் மீண்டும் தொடங்கியது.
இன்று (22.09.2021) டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் போட்டி நடைபெற இருந்தநிலையில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் நடராஜனுடன் தொடர்பில் இருந்த விஜய் சங்கர் உட்பட அணி நிர்வாகிகள் 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருந்தாலும் இன்றைய போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.