Published on 28/04/2021 | Edited on 28/04/2021

இன்று நடந்த ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் ஆடிய சென்னை அணி 3 விக்கெட் இழந்து 18.3 ஓவர்களில் 173 ரன்களை எடுத்து அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.
ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக மணீஷ் பாண்டே 61 ரன்களையும், கேப்டன் டேவிட் வார்னர் 57 ரன்களையும் குவித்தனர். சென்னை அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் கெய்க்வாட் 75 ரன்களும் , டூ பிளஸ்சி 56 ரன்களும் குவித்தனர். நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து 5 வெற்றிகளை பெற்று முதலிடம் பிடித்துள்ளது.