உலகம் முழுவதும் பிரபலமான ஐ.பி.எல் தொடர், இன்று இரவு (9ஆம்தேதி) தொடங்கி நடைபெற இருக்கிறது. இதனையடுத்துவீரர்கள், தங்கள் அணியோடு இணைந்து வருகின்றனர். மேலும் ஐபிஎல் அணிகள், தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜோஷ் ஹேசல்வுட், அடுத்த 12 மாதங்களில் ஆஸ்திரேலியா அதிகமானசர்வதேச போட்டிகளில் விளையாடவுள்ளதால், அதற்குத் தயாராகும் விதமாக ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதனையடுத்துசென்னை சூப்பர் கிங்ஸ்அணி,ஜோஷ் ஹேசல்வுட்டுக்கு மாற்றாக இன்னொரு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப்பை ஒப்பந்தம் செய்துள்ளது. இவர்ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2019ஆம் ஆண்டில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப், கரோனாதடுப்பு விதிமுறைகளின்படி7 நாட்கள்தனிமைப்படுத்தப்படுவார்என்பதால், சென்னை அணியின் முதலிரண்டு போட்டிகளில் ஆடமாட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.