Published on 19/11/2021 | Edited on 19/11/2021

உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட வீரரான ஏபி டிவில்லியர்ஸ், ஏற்கனவே சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற நிலையில், ஐபிஎல் போன்ற லீக் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடிவந்தார். இந்தநிலையில், தற்போது திடீரென அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விடைபெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.
அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கு பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி அவரை தக்கவைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏபி டிவில்லியர்ஸின் இந்த திடீர் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ட்விட்டரில் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ள ஏபி டிவில்லியர்ஸ், தனது கிரிக்கெட் வாழ்க்கை ஒரு நம்பமுடியாத பயணமாக இருந்தது என கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.