Skip to main content

பாகிஸ்தானுக்கு 152 ரன்கள் இலக்கு!

Published on 24/10/2021 | Edited on 24/10/2021

 

 

152-run target for Pakistan!

 

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டி துபாயில் உள்ள துபாய் சர்வதேச மைதானத்தில் இரவு 07.00 PM மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸாம் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

 

அதைத் தொடர்ந்து, பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 57, ரிஷப் பந்த் 39, ரவீந்திர ஜடேஜா 13 ரன்கள் எடுத்தனர். அதேபோல், பாகிஸ்தானி அணி தரப்பில் ஷாஹீன்- ஷா அஃப்ரிடி 3, ஹசன் அலி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

 

இந்த நிலையில், 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. 

 

 

Next Story

ஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்பு கேட்ட பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

abdul Razzaq apology to Aishwarya Rai

 

உலகக் கோப்பை 2023 தொடரில் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறாமல் லீக் சுற்றிலேயே  வெளியேறியது. இது தொடர்பாகப் பாகிஸ்தானில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் ரஸாக், “உண்மையில், பாகிஸ்தானில் வீரர்களை உருவாக்கி மெருகூட்ட வேண்டும் என்ற நல்ல எண்ணம் எங்களுக்கு இல்லை. நீங்கள் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்துகொண்டு ஒழுக்கமுள்ள குழந்தையை எதிர்பார்க்க விரும்பினால், அது ஒருபோதும் நடக்காது” எனப் பேசியிருந்தார். 

 

ஐஸ்வர்யா ராய் குறித்து மரியாதை குறைவாகப் பேசியதாக, அப்துல் ரஸாக்கின் இந்த கருத்திற்குப் பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்தது. சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்தது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக அப்துல் ரஸாக் மன்னிப்பு கோரியுள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட அவர், “நேற்று, நாங்கள் கிரிக்கெட் பயிற்சி மற்றும் வியூகங்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ஐஸ்வர்யா ராயின் பெயரை வாய் தவறி தவறுதலாக குறிப்பிட்டுவிட்டேன். நான் அவரிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்கிறேன். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை” எனப் பேசியுள்ளார். 

 

 

Next Story

அணியின் ரகசியங்களை கேட்ட மர்ம நபர்; முகமது சிராஜ் பரபரப்பு புகார்!

Published on 19/04/2023 | Edited on 19/04/2023

 

cricketer mohammed siraj contact unknown person related incident 

 

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் பிசிசிஐ அமைப்பின் ஊழல் தடுப்பு பிரிவில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

 

அவர் அளித்துள்ள அந்தப் புகாரில், "கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் பணத்தை இழந்த அடையாளம் தெரியாத ஒருவர் என்னை தொடர்பு கொண்டு அணியின் உள் ரகசியங்களை சொன்னால் எனக்கு ஒரு பெரிய தொகை தருவதாகக் கூறினார்" எனத் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில் முகமது சிராஜின் இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் அந்த நபரை அடையாளம் கண்டுபிடித்து நடத்திய விசாரணையில் முகமது சிராஜை தொடர்பு கொண்டவர் ஹைதராபாத்தை சேர்ந்த ஓட்டுநர் என தெரிய வந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.