Skip to main content

யாரெல்லாம் நமக்கு ஆதரவாக இருக்கிறார்கள்...

Published on 08/02/2019 | Edited on 09/02/2019

நம்மில் பெரும்பாலும் அலுவலகத்தில் வேலை பார்க்கும் போது தலைமை இடத்துக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குமே வரக் கூடிய ஒன்றாகும் .அப்படி வர நினைப்பவர்கள் தன்  கூட வேலைப் பார்க்கும் சக ஊழியரைப் பற்றி எவ்வளவு தூரம் தெரிந்து வைத்திருக்கிறோம் அது மட்டுமில்லாமல் யாரெல்லாம் நமக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று தெரிந்து வைத்திருக்க வேண்டும் .சரி எந்த மாதிரி பண்புகள் என்றுப் பார்க்கலாம் .ஒரு தலைவர் தன்னைப் பற்றி அறிந்துகொண்டிருந்தால் போதாது, தன்னைப் பின்பற்றுகிறவர்களைப் பற்றியும் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். அதாவது தன் குழுவினரைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். குழு உறுப்பினர் ஒவ்வொருவரின் தனித்திறன்கள், நோக்கங்கள், அவர்களது தேவைகள் அவர்களது, உணர்வுகள்  போன்றவற்றை தலைவர் நன்கறிந்திருக்க வேண்டும். 
 

supporting staff

அப்போதுதான் குழுவில் திட்டங்களை நிறைவேற்றும் பணியில் குழு உறுப்பினரை நல்ல முறையில் செயல்பட  வைக்க முடியும். செயலூக்கமுள்ள தலைவர் தன் உறுப்பினர்களது பலம், பலவீனங்களை தெரிந்துவைத்திருந்தால் அவர்களுக்கு உதவி செய்வதன்மூலம், அவர்களையும்  செயல்திறன் மிக்க உறுப்பினராக்க முடியும். இப்படி ஒவ்வொரு உறுப்பினர் குறித்தும் தெரிந்து வைத்திருப்பதன்மூலம் குழுவின் தேவைகளை, திறமைகளை, குறிக்கோள்களைஅடையும் செயல்திறன்களை பலம்,  பலவீனங்களை, வரம்புகளை, குழுவின் முழு ஆற்றலைத் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும். தலைவர் அறிவிக்கும் திட்டத்தை அவர் தன் குழுவினரால்  நிறைவேற்ற முடியுமா என்பது குறித்தும் அவரால் முன்கூட்டியே கூறமுடியும். ஒவ்வொரு தனிப்பட்ட உறுப்பினர் மீதும் தலைவர் அன்புணர்ச்சி கொண்டவராக இருக்க  வேண்டும்.   குழு உறுப்பினர்களுடன் தலைவருக்கு இடையறாத தொடர்பு இருக்க வேண்டுமானால், சிறந்த தகவல் தொடர்பு ஏற்பாடு அமைத்திருக்கவேண்டும். தலைவரின் கருத்துக்கள் எல்லா உறுப்பினர்களுக்கும் சென்று சேரவேண்டும். 

தொண்டர்களின் கருத்துக்கள் அவ்வாறே தலைமையை சென்றடைய வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் குழுவில் இருக்க வேண்டும். கடிதம், சுற்றறிக்கை ஊடக வாயிலானதொடர்பு, செய்தி மடல்கள் மூலமான தொடர்பு, நேரடி கூட்டங்கள் மூலம் தொடர்பு என வலுவான தொடர்பு தலைவருக்கும் தொண்டர்களுக்கும் இடையில் இருக்க வேண்டும்.குழு உறுப்பினர்களின் திருப்தி குழுவுக்கும் அதனை வழி நடத்தும் தலைவருக்கும் பலம் சேர்க்கும். குழு உறுப்பினர்கள் மத்தியில் அதிருப்தி பல காரணங்களால்  ஏற்படுமானால் அது குழுவையும் தலைவரையும் பலவீனப்படுத்திவிடும். "திருப்தி உணர்வு'“  குழுவினரிடம் அதிகரித்தால் குழுவினரின் திறமை மீதான நம்பிக்கை தலைவரிடம் அதிகரிக்கும்.
 

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

காவலாளி டூ கரீபியன் ஹீரோ; உத்வேகம் அளிக்கும் சமர் ஜோஸப் கிரிக்கெட் பயணம்!

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
shamar joseph cricket journey

காபாவில் ஆஸ்திரேலிய அணியைக் காலி செய்த சமர் ஜோஸப், முதல் பந்திலேயே ஸ்மித் விக்கெட் எடுத்து சாதித்த ஜோஸப், மேற்கு இந்திய தீவுகளின் அடுத்த வால்ஸா இந்த ஜோஸப் என கடந்த இரண்டு வாரமாக கிரிக்கெட் உலகம், சமூக வலைத்தளங்கள்  முழுவதும் என  சமர் ஜோஸப் பேச்சு தான். யார் இந்த சமர் ஜோஸப் ?

மேற்கு இந்திய தீவுகளில் ஒரு சிறிய கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். கிரிக்கெட் மீது அளவு கடந்த ஆர்வம் இருந்தாலும் தன்னுடைய பொருளாதார சூழ்நிலையால் தொழில் முறை கிரிக்கெட்டில் விளையாட முடியாத நிலை. படிக்கவும் முடியாத சமர் ஜோஸப் ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி ஆகப் பணிபுரிந்து கொண்டே கிரிக்கெட் மீது கொண்ட தீராப் பற்றால் விடாமுயற்சியால் கயானா அணிக்கு நெட் பவுலராக தேர்வாகிறார். செக்யூரிட்டி வேலை பார்த்துக் கொண்டே நெட் பவுலராகச் சேர்ந்து அதில் கிடைக்கும் வருமானத்தை குடும்ப தேவைக்காக பயன்படுத்துகிறார்.

இந்நிலையில், மேற்கு இந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி என்னும் ஒரு அணி உள்ளது. அதன் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர் உள்ளார். அந்த அணிக்கு அனலிஸ்ட் ஆக, கிரிக்கெட் வீரர் அஸ்வின் நண்பரான பிரசன்னா உள்ளார். கடந்த ஆண்டு கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளின் பயிற்சிக்காக நெட் பவுலிங் செய்த சமர் ஜோஸப் திறமையை பார்த்த பிரசன்னா, ஜோஸப்பை கூடுதல் வேகமாக பந்து வீச சொன்னபோது, அப்படியே செய்து அசத்த, கேப்டன் இம்ரானிடம், இவரை அணியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கிறார். அன்று தான் தொழில் முறை கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார். அடுத்த போட்டியிலேயே கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக களமிறங்கினார். கடந்த வருடம் கயானா அணியும் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

பின்னர் மேற்கு இந்திய தீவுகள் அணியின் முதல் தர போட்டிகளில் பங்குபெற்று சிறப்பாக ஆடி, தேசிய அணியில் இடம் பிடித்தார். தன் அறிமுக டெஸ்ட் ஆட்டத்திலேயே உலகின் மிக்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தின் விக்கெட்டை தனது கிரிக்கெட் கேரியரின் முதல் பந்திலேயே வீழ்த்தி அசத்தினார். அந்த முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தாலும் பரபரப்பான இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணிக்கு 217 ரன்கள் என்ற  இலக்கு. எளிதாக வென்று விடுவார்கள் என்று நினைத்த போது, சமர் ஜோஸப்பின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். சிறப்பாக பந்து வீசிய சமர் ஜோஸப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கு இந்திய தீவுகள் அணியை வெற்றிக்கு முக்கிய காரண்மாக அமைந்தார். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்று அசத்தியுள்ளார். இரண்டாவது இன்னிங்சில் பேட் செய்த போது ஸ்டார்க் வீசிய பந்து சமர் ஜோஸப் பாதத்தை பதம் பார்த்து வெளியேறிய போதும், பதறாமல் பந்து வீசி ஆஸ்திரேலிய அணியை காபா மைதானத்தில் வீழ்த்த உறுதுணையாக இருந்தார். காபாவில் ஆஸியை வீழ்த்த முடியாது என்ற மாயையை இந்திய அணி முதலில் தகர்த்தது. மேற்கு இந்திய தீவுகள் அணி இனி டி 20 அணி மட்டுமே என்று விமர்சித்தவர்களே வியக்கும் வண்ணம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது.

வால்ஸ், மார்ஷல், ஆம்ப்ரோஸ், மைக்கேல் ஹோல்டிங் என வேகப்பந்து வீச்சுக்கு புகழ் பெற்ற மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு அப்படி பெயர் சொல்ல ஒரு வீரர் இல்லையே என்ற ஏக்கத்தைத் தீர்க்க இந்த சமர் ஜோஸப் இருக்கிறார் என்று மேற்கு இந்திய தீவுகள் அணியின் ரசிகர்களும், உலக கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

மேலும் ரசிகர்கள், அவர் வாழும் பராகரா என்ற கிராமத்தில் 2018 வரை இண்டர்நெட் இல்லை, ஆனால் தற்போது இண்டர்நெட் முழுவதும் அவர் பேச்சு தான் எனவும், காவலாளி டூ கரீபியன் ஹீரோ எனவும் சமர் ஜோஸப் பற்றி சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். 

- வெ.அருண்குமார்