Skip to main content

ஒன்ப்ளஸ் 6 மிடில் கிளாஸ் உயர்தர மொபைல் !

Published on 17/05/2018 | Edited on 18/05/2018

ஐபோன் எக்ஸ் (Iphone X) வந்த பிறகு, எல்லோரும் அடுத்து ஆர்வமாக காத்திருந்தது ஒன் ப்ளஸ் 6 என்ற மொபைலுக்குத்தான். இன்டர்நெட் உலகில் தினசரி ஒன் ப்ளஸ் 6 மொபைல் பற்றிய எதாவது ஒரு தகவல் கசிந்துகொண்டே இருந்தது. இணையத்தில் கசிந்தது போலவே தற்போது பல வசதிகளுடன் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் நேற்று லண்டனில் ஒன்ப்ளஸ் 6 மொபைல் வெளியீட்டு விழா நடந்துள்ளது. இன்று மும்பையிலும் இந்திய மக்களுக்காக ஒன்ப்ளஸ் 6 நிறுவனம் மொபைலை வெளியிட்டது. இந்த மொபைலின் சிறப்பம்சங்கள் என்னவென்று பார்ப்போம்...  

oneplus 6

 

 

ஒன்ப்ளஸ் 6 நாட்ச் டிஸ்பிலேவை அறிமுகம் செய்திருக்கிறது. ஐ போன் எக்ஸிலிருந்து  தற்போது வெளிவந்துள்ள விவோ எப் 7 வரை இந்த டிஸ்பிலே இருப்பதால், இது ஒரு புதிய மாற்றமாக சேர்க்கப்பட்டுள்ளது. நாட்ச் சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது ஆதலால் நாட்ச் என்ற ஆப்ஷனை நாம் எடுத்துக்கொள்ளவும் இதில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக இதன் டிஸ்பிலே 6.2 இன்ச் அளவுகொண்டது. அதேபோல பேக் பேனல் கொரில்லா கிளாஸ் 5. 

இந்த மொபைலின் சிறப்பு என்று நிறுவனமே சொல்வது, இதன் பயன்பாட்டு வேகத்தை தான். வேகத்தை அதிகப்படுத்தவே இந்த மாடலில் Qualcomm’s Snapdragon 845 octa-core processor பயன்படுத்தியிருக்கின்றனர். ஏற்கனவே இதற்கு முன்பு வந்த ஒன்ப்ளஸ் 5 மற்றும் 5டி மாடல்கள் வேகத்திலும், பயன்பாட்டிலும் எல்லோர் மனதையும் கவர்ந்தது, அதேபோல இதுவும் கண்டிப்பாக அனைவரையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் கேமராக்களின் தரத்தை எந்த ஒரு மொபைலும் புகைப்படத்தில் தந்ததில்லை, ஆனால் இந்த ஒன்ப்ளஸ் மொபைலோ அதை சமன் செய்யும் அளவிற்கு புகைப்படங்களின் தரத்தை தருகிறது. இந்த மாடலில் கூட பழைய மொபைலில் இருந்தது போலவே பின்பக்கம் இரண்டு கேமராக்கள் அதில் ஒன்று 20mp மற்றொன்று 16 mp. செல்பி பிரியர்களுக்கு என்று பிரண்ட் கேமராவில் 16 mp கொடுத்துள்ளனர். கிராபிக்ஸ் தாறுமாறாக இருக்க வேண்டும் என்பதற்காக andreno 630 கொடுத்துள்ளனர்.
 

 

oneplus 6

 

 

இதில் ஆக்சிஜன் ஓஎஸ் 5.1,  ஆன்டிராய்டு ஓரியோ 8.1வுடன் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதுதான் காஸ்டலி மொபைல் என்ற தோற்றத்தை இந்த மொபைல் பெற ஒரு தடையாய் இருக்கிறது என்று பலர் தெரிவிக்கின்றனர். இன்னுமொரு தூளான விஷயம் என்றால் டேஷ் சார்ஜிங்தான். பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே போதுமாம் ஐந்து மணிநேர பிளேபேக் டைம் பெற முடியும் என்கின்றனர். பழைய மாடலில் இருப்பது போலவே டைப் சி யுஎஸ்பி வகை கொடுக்கப்பட்டுள்ளது.

 


மிட்நைட் பிளாக், மிர்ரர் பிளாக் மற்றும் சில்க் வைட் போன்ற நிறங்களில் இது  கிடைக்கின்றது. இந்த மொபைல் மூன்று வகைகளில் விற்பனைக்கு வருகிறது, ஒன்று 6 gb ரேம் 64 gb ரோம், 8 gb ரேம் 128 gb ரேம், 8 gb ரேம் 256 gb ரோம். 256 gb என்பது இந்த முறைதான் முதல் முறையாக வெளியிடுகிறது. மேலும் இது வெதர் ரெசிஸ்டண்ட்.

 

 


இதன் ஆரம்ப விலை 34,999 ரூபாய். இதில் இன்னொரு எடிஷனாக அவெஞ்சர்ஸ் மாடல் என்று வருகிறது. அதன் விலை கிட்டதட்ட 44,999 ரூபாய். இதுபோன்று பல தரமான சிறப்பான விஷயங்களை கொண்ட இந்த மொபைல் அமேஸானில் வரும் இருபத்தி இரண்டாம் தேதி விற்பனைக்கு வருகிறது.                              

Next Story

சார்ஜர் இல்லாமல் ஐ போன்... ஆப்பிளுக்கு 19 கோடி அபராதம்

Published on 08/09/2022 | Edited on 08/09/2022

 

 iPhone without charger... Apple fined 19 crores!

 

சார்ஜர் இல்லாமல் ஐ போன் விற்பனை செய்த ஆப்பிள் நிறுவனத்திற்கு 19 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது பிரேசில் அரசு.

 

சார்ஜர் உடன் மட்டுமே செல்போன் விற்க வேண்டும் என பிரேசில் அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் ஐ போனுக்கு கூடவே அதற்கான சார்ஜரை வழங்கினால் எண்ணிக்கை அதிகரித்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் தங்களால் செல்போனுடன் சார்ஜரை விற்க முடியாது என பிரபல நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் தெரிவித்து வந்தது. ஆனால் சாம்சங் தனது புதிய போனை சார்ஜர் உடன் விற்று வருகிறது. இந்நிலையில் சார்ஜர் இல்லாமல் ஐ போன்-12 மாடலை விற்பனை செய்த ஆப்பிள் நிறுவனத்திற்கு 19 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது பிரேசில் அரசு, சார்ஜர் இல்லாத அனைத்து ஐபோன் விற்பனைக்கும் இடைக்கால தடை விதித்துள்ளது.

 

 

Next Story

ஆப்பிளின் புதிய ஐஃபோன்- 13 சென்னையில் தயாராகிறது!

Published on 11/04/2022 | Edited on 11/04/2022

 

Apple's new iPhone 13 is ready in Chennai!

 

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்ஃபோனான ஐஃபோன்- 13 உற்பத்தி, சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புத்தூரில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் தொடங்கியுள்ளது. 

 

ஆப்பிள் நிறுவனத்துக்கு ஒப்பந்த முறையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து தரும், ஃபாக்ஸ்கான் நிறுவனம் தற்போது ஆப்பிள் ஐஃபோன்- 13 உற்பத்தி செய்து தர தொடங்கியுள்ளது. இதையடுத்து, ஐஃபோன்களின் முன்னணி மாடல் ஸ்மார்ட்ஃபோன்கள் அனைத்தும் சென்னை ஆலையில் தயாராகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

 

சென்னையில் ஃபாக்ஸ்கான் உள்பட மூன்று ஒப்பந்த நிறுவனங்களில் ஆப்பிள்களின் ஐஃபோன்கள் உற்பத்திச் செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவில் ஸ்ரீபெரும்புதூரில் ஐஃபோன் 13 உற்பத்தி நமது பயணத்தின் மற்றொரு மைல்கல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கும், உலகத்துக்கும் மேக் இன் தமிழ்நாடு என்ற ஹேஸ்டேக்கில் இதனை அவர் பதிவிட்டுள்ளார்.  

 

இந்திய செல்போன் சந்தையில் ஆப்பிள்களின் சந்தை பங்கும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.