முட்டை இந்த ஒற்றை சொல்லை நாம் கேள்வி படாமல் இருந்திருக்க மாட்டோம். ஏழை எளிய மக்களின் வாழ்வோடு தினசரி கலந்திருக்கும் ஒரு உணவு. அசைவம் சாப்பிட முடியாமல் வசதி குறைவாக உள்ளவர்களுக்கு இருக்கின்ற ஒரே அசைவ உணவு முட்டை. ஏழைகள் மட்டுமில்லாமல் அனைவராலும் விரும்பப்படும் இந்த முட்டையில் அப்படி என்னதான் இருக்கிறது. ஏன் அனைவரும் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். காரணத்தை விரிவாக பார்ப்போம்.
முட்டையில் லுடீன் என்ற மூல பொருட்கள் அதிக அளவு நிறைந்துள்ளதால் கண் பார்வைக்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது. எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் செலுனியம் என்ற பொருள் முட்டையில் அதிகம் நிறைந்துள்ளது. ஓமேகா 3 முட்டையில் அதிகம் இருப்பதால் இதய பிரச்சனைகள் வராமல் காக்கிறது. எலும்புகளுக்கு முட்டை வலிமையை தரும். எனென்றால் முட்டையில் வைட்டமின் டி நிறைந்துள்ளது. உடல் உழைப்பு அதிகம் செய்யாதவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முட்டை சாப்பிடுவது சிறந்த ஒன்று. ஏனெனில் அதிகப்படியான முட்டை சாப்பிடுதல் என்பது அவர்களுக்கு அதிக கொழுப்பை உண்டாக்கும். ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க முட்டை மிக சிறந்த ஒரு உணவுப்பொருள்.