இதுவரை மனித மூளையை வெல்லும் கம்ப்யூட்டர் கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது. ஆனால், அதையும் செய்து மனிதன் சாதித்திருக்கிறான்.
மனிதமூளை ஒரு வினாடிக்கு 2 ஆயிரம் கோடி செயல்பாடுகளை இயக்கும் ஆற்றல் கொண்டது. அதற்கு இணையான ஸ்பின்னேக்கர் என்ற சூப்பர் கம்ப்யூட்டரை பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழகம் உருவாக்கி இருக்கிறது. இந்த கம்ப்யூட்டரில் உள்ள சிப் ஒவ்வொன்றும் 10 கோடி டிரான்சிஸ்டர்கள் அல்லு கடத்திகளைக் கொண்டிருக்கின்றன.
நமது மூளையில் உயிரியல் நியூரான்கள்தான் அடிப்படை அணுக்களாக இருக்கின்றன. நமது நரம்பு மண்டலத்தில் உள்ள இந்த அணுக்களில் இருந்து வெளிப்படும் சுத்தமான மின் வேதியியல் ஆற்றல்தான் தகவல்களை பரிமாற உதவுகிறது. இந்தச் சூப்பர் கம்ப்யூட்டர் கோடிக்கணக்கான சிறு தகவல்களை ஆயிரக்கணக்கான பகுதிகளுக்கு ஒரே சமயத்தில் அனுப்பக்கூடியவை என்று இந்த கம்ப்யூட்டரை வடிமைக்க காரணமான ஸ்டீவ்ஃபர்பெர் கூறியிருக்கிறார். பாக்கலாம், இதாவது மனித மூளையை வெல்லுமா என்று!