தி.மு.க.வின் முன்னாள் தலைவரும், மறைந்த தமிழகத்தின் முதல்வருமான கலைஞர், தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் கவிஞர்களின் நினைவாக கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி, கவியரங்கம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
தனது தந்தை கலைஞரைப் போல், இலக்கிய ஆர்வமும், தமிழ் உணர்வும் உடைய தி.மு.க. மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்.பி, நக்கீரன் குழுமத்தின் இலக்கிய இதழான இனிய உதயம் பத்திரிகையுடன் இணைந்து, புரட்சி கவிஞர் மகாகவி பாரதியாரின் 139-வது பிறந்த நாளையொட்டி மாபெரும் கவிதைப் போட்டியை நடத்துகிறார்.
கவிதைகளை இன்று (29/11/2021) முதல் அனுப்பலாம், போட்டியில் பங்கேற்கும் இளம் கவிஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள் என்று, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
நவம்பர் 29 முதல் டிசம்பர் 6 வரை நடைபெற உள்ள இந்த கவிதைப் போட்டியில், 16 வயதுக்கு உட்பட்ட படைப்பாளிகள் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.50,000, 2-ம் பரிசாக ரூ.25,000, மூன்றாக பரிசாக ரூ.15,000, 4ம் பரிசாக ரூ.10,000, 5-ம் பரிசாக ரூ.5,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் ஆறுதல் பரிசாக 10 பேருக்கு புத்தக தொகுப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.