Skip to main content

தினசரி ராசிபலன்- 16.09.2021

மிதுனம்
இன்று தொழில் ரீதியாக அலைச்சலுக்கு பின் அனுகூலப் பலன் கிட்டும். பெரிய மனிதர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உங்கள் ராசிக்கு பகல் 10.42 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பம் உண்டாகும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

kadagam

கடகம்
இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும். உடன் பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். வியாபாரம் லாபகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும்.

5

சிம்மம்
இன்று உங்களுக்கு இனிய செய்திகள் இல்லத்தை தேடி வரும். பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் அவர்கள் தகுதிக்கேற்ற உயர்வு கிட்டும். வருமானம் பெருகும்.

kannirasi

கன்னி
இன்று உங்களுக்கு எதிர்பாராத பிரச்சினைகளால் மனஉளைச்சல் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.   வெளியூர் பயணங்களால் வெளிவட்டார நட்பு ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

thulam

துலாம்
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக சிறப்பான நிலை இருக்கும். பிள்ளைகளுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் அனுகூலப் பலன் உண்டாகும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.

viruchagam

விருச்சிகம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். 

danush

தனுசு
இன்று உங்களுக்கு உடல் நிலையில் சற்று மந்த நிலை காணப்படும். தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினை குறையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.

magaram

மகரம்
இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிட்டும். புதிய தொழில் தொடர்பாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

kumbam

கும்பம்
இன்று வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். வண்டி வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை நீங்கி ஈடுபாடு அதிகரிக்கும்.

meenam

மீனம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.