Skip to main content

தினசரி ராசிபலன்- 08.05.2022

Published on 08/05/2022 | Edited on 08/05/2022

மிதுனம்
இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். பெற்றோரின் ஆதரவு மனதிற்கு புது தெம்பையும், நம்பிக்கையையும் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படலாம்.

kadagam

கடகம்
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான நிகழ்ச்சி நடை பெறும். தொழில் முன்னேற்றத்திற்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிட்டும்.

5

சிம்மம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் குறையும். புதுவிதமான செயல்பாட்டால் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். கொடுத்த கடன் வசூலாகும். உடன்பிறந்தவர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். பிள்ளைகளால் பெருமை சேரும்.

kannirasi

கன்னி
இன்று உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். பழைய கடன்கள் தீரும். புதிய நபரின் அறிமுகத்தால் வியாபாரத்தில் பல மாற்றங்கள் உண்டாகும். வீட்டில் பெண்களுக்கு வேலைபளு குறையும்.

thulam

துலாம்
இன்று குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி  கொள்வது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதால் தேவைகள் பூர்த்தியாகும்.

viruchagam

விருச்சிகம்
இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். உற்றார் உறவினர்களிடம் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் நிம்மதி உண்டாகும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும்.

danush

தனுசு
இன்று உங்களுக்கு தேவையற்ற அலைச்சல் டென்ஷன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. மன அமைதி குறையும்.

magaram

மகரம்
இன்று நீங்கள் எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நவீன பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பொருளாதார பிரச்சினைகள் தீரும். வருமானம் அதிகரிக்கும்.

kumbam

கும்பம்
இன்று உற்றார் உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். தொழில் சம்பந்தமாக நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த கடன் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.

meenam

மீனம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகலாம். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள்  சற்று குறையும். வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் புதிய முயற்சிக்கு நற்பலன் கிடைக்கும்.