மிதுனம்
இன்று உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வெளியூர் பயணங்களில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு அமையும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்பட்டாலும் சுப செய்தி கிட்டும்.
கடகம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தாமத நிலை உண்டாகும். தேவையற்ற பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நிதானமாக நடப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
சிம்மம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக அமையும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
கன்னி
இன்று நீங்கள் குடும்பத்தினரின் உதவியுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு வண்டி வாகனங்களை வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். திடீர் பணவரவு உண்டாகும். குடும்ப தேவைகள் அனைத்தும் நிறைவேறும்.
துலாம்
இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். எதிலும் சிக்கனம் தேவை.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மனநிம்மதி குறையும். தூர பயணங்களால் அலைச்சல் உடல் சோர்வு உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனைவி வழி உறவினர்களால் அனு-கூலமான பலன் உண்டாகும். தெய்வ வழிபாடு நல்லது.
தனுசு
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உறவினர்கள் வழியாக சுப செய்திகள் தேடி வரும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் இன்று கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறைந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டுத் தேவைகள் நிறைவேறும்.
மகரம்
இன்று குடும்பத்தில் பொருளாதார நெருக்கடியால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
கும்பம்
இன்று உங்களுக்கு பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை ஏற்படும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் வீண் விரயங்கள் உண்டாகும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
மீனம்
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். அரசியல் பிரமுகர்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நற்பலன் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.