Thaipusam at Palani Murugan Temple  held without devotees!

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் விமர்சையாகக் கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்று தைப்பூசத் திருவிழா.

Advertisment

இந்தத் தைப்பூசத் திருவிழா இந்த ஆண்டு கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாள் திருவிழாவாக நடைபெற்று வருகிறது. தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வள்ளி, தெய்வானை - முத்துக்குமாரசாமி கல்யாணம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று தைப்பூசத் தினத்தில் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisment

Thaipusam at Palani Murugan Temple  held without devotees!

மலை அடிவாரத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் பக்தர்கள் இன்றி கோயில் ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்களைக் கொண்டு தேர் உலா நிகழ்ச்சி நடைபெற்றது. சிறிய அளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்துக்குமாரசுவாமி - வள்ளி, தெய்வானையுடன் தேர் வலம்வந்தது.

வழக்கமான தைப்பூச நாட்களில் நடைபெறக்கூடிய தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை நான்கு ரத வீதிகளில் இழுக்கக்கூடிய நிகழ்வு நடைபெறும். கரோனோ தொற்று பரவல் காரணமாக எளிமையான முறையில் தேரோட்ட நிகழ்ச்சியை கோயில் ஊழியர்கள் நடத்தி முடித்தனர். பழனி கோவில் தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொள்ள தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வருகைதந்துள்ளனர்.