Skip to main content

உலகின் மிக வயதான டால்பின் உயிரிழப்பு....

Published on 19/09/2018 | Edited on 19/09/2018
dolphin


உலகின் மிக வயதுடைய டால்பின் என்று அறியப்பட்ட மோபி டால்பின் தனது 58ஆவது வயதில் காலமானது. ஜெர்மனி நாட்டிலுள்ள டையர்கார்டன் என்னும் உயிரியல் பூங்காவில் கடந்த 48வருடங்களுக்கு முன்பு பிடித்து வளர்க்கப்பட்டது. மோபி தனது வாழ்நாளில் மூன்று தலைமுறையை பார்த்துள்ளது. இது பாட்டில் மூக்கு வகையை சேர்ந்தது. பாட்டில் மூக்கு வகை டால்பின்கள் சராசரியாக 50 வருடங்கள் வாழும் என்பது குறிப்பிடத்தக்கது.  


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாரத்தில் 4 நாட்கள் வேலை 3 நாட்கள் விடுமுறை - நாளை முதல் அமல்

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
Shorter working hours scheme came into force in Germany from tomorrow

உலக நாடுகள் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் பொருளாதார வளர்ச்சியில் இருந்து மீள ஜெர்மனி குறைவான வேலை நேரம் என்ற முறையை கடைப்பிடிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஒரு வாரத்திற்கு 4 நாட்கள் வேலை என்ற குறைவான வேலை நேரம் என்ற முறையை உலகின் வளர்ந்த நாடுகள் கூட கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்த முறை மூலம் ஊழியர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியமாவதாகவும், அதன் மூலம் அவர்களது செயல்திறன் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 21 நாடுகளில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் வேலை நேரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜெர்மனியிலும் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற முறை நாளை(1.2.24) முதல் கடைப்பிடிக்கப்படவுள்ளது. மீதமுள்ள 3 நாட்கள் விடுமுறை. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஜெர்மனிய தொழிலாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்த நிலையில் நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது. முதற்கட்டமாக சோதனை முறையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டம் அடுத்த 6 மாதத்திற்கு மேற்கொள்ளப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

Next Story

கடலூரில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்!

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

dolphin was found washed up on the beach at Rasa Pettai, Cuddalore

 

கடலூர் மாவட்டத்தில் சிங்காரத்தோப்பு, தேவனாம்பட்டினம் தாழங்குடா, ராசா பேட்டை, அன்னங் கோயில், குமார பேட்டை உள்ளிட்ட 54 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து தினந்தோறும் ஏராளமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்று வருகின்றனர். 

 

இந்நிலையில் நேற்று இரவு ராசாபேட்டை கடற்கரை ஓரத்தில் டால்பின் ஒன்று மயங்கிய நிலையில் கரை ஒதுங்கிக் கிடந்தது. மேலும் அதன் மீது பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் வலைகள் இருந்தது. இதை பார்த்த அந்த பகுதி இளைஞர்கள் உடனடியாக அந்த டால்பினை மீட்டு அதன் மீது இருந்த பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் வலையை நீக்கி மீண்டும் அதை தூக்கிக் கொண்டு கடலில் நீந்திச் சென்று நடுக்கடலில் கொண்டு விட்டு வந்தனர். 

 

பின்பு நீண்ட நேரம் கரையில் நின்று பார்த்தும் டால்பின் வரவில்லை. இதையடுத்து இளைஞர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை அந்த டால்பின் மீன் ராசாப்பேட்டை கடற்கரை ஓரத்தில் செத்து கரை ஒதுங்கிக் கிடந்தது. இந்த டால்பின் சுமார் ஐந்து அடி அளவுக்கு இருந்தது. இதை மீனவர்கள் வந்து பார்த்து சென்றனர். இது குறித்து மீன்வளத் துறையினர் டால்பின் இறந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.