கரோனா வைரஸ் பரவலில் அரசியல் செய்யாதீர்கள் என ட்ரம்ப்புக்கு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

who on trumps china centric comment

Advertisment

Advertisment

உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.7 லட்சம் என்ற அளவிலும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.6 லட்சம் என்ற அளவிலும் உள்ளது.தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85,000 ஐ கடந்துள்ளது. இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 4.35 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, அதில் 14,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் உலா சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக ட்ரம்ப் குற்றம்சாட்டியிருந்ததற்கு அவ்வமைப்பு பதிலடி கொடுத்துள்ளது.

"அமெரிக்காவில் அதிக அளவு கரோனா பரவி வருவதற்குக் காரணம், உலக சுகாதார அமைப்பு முன்கூட்டியே எச்சரிக்காதது தான்.சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு நடப்பதால், இனிமேல் உலக சுகாதார அமைப்புக்கு வழங்கும் நிதியை நிறுத்தப்போகிறோம்" என ட்ரம்ப் தெரிவித்தார்.

ட்ரம்ப்பின் விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ், "கரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிகவேகமாகப் பரவி வருகிறது.இதைத் தடுக்க உலக நாடுகளுக்கு இடையே ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் மிகவும் அவசியம்.

http://onelink.to/nknapp

நான் உலகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளைக் கேட்டுக்கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.அதிகமான சவப்பெட்டிகளை உங்கள் தோளில் சுமக்க விரும்பவில்லையென்றால்,கரோனா விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்.இது நெருப்புடன் விளையாடுவது போன்றது.அதேபோல ஆப்பிரிக்க மக்கள் மீதும், மண்ணின் மீதும் தடுப்பூசிகளைச் சோதனை செய்வதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்.அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் வேற்றுமையை மறந்து நாட்டின் நலனுக்காக,மக்களுக்காக ஒன்றிணைய வேண்டும்.இல்லையெனில் கரோனாவை ஒழிப்பது சிரமம்" எனத் தெரிவித்துள்ளார்.