Skip to main content

அதென்ன அஃபெலியன் நிகழ்வு... அப்போ இனி குளிர் மட்டும்தானா?-விளக்கமளித்த விஞ்ஞானிகள்!

Published on 06/07/2022 | Edited on 06/07/2022

 

What is the Aphelion phenomenon... Is it just cold now?-Explained by scientists!

 

இன்று காலை முதல் அஃபெலியன் நிகழ்வு தொடங்கி விட்டதாகவும், இதனால் பூமியில் வழக்கத்தைவிட குளிர் அதிகரிக்கும் என்றும், உடல் உபாதைகள் அதிகரிக்கும் என்றும் சில தகவல்கள் வெளியாகி இருந்தன. இன்று அதிகாலை 5.27 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்வு வரும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும், இதனால் காலநிலை கடந்த ஆண்டுகளை விட குளிராக இருக்கும் என்றும் தகவல்கள் வெளிவந்தன. இதனால் மனிதர்களுக்கு தொண்டை வலி, சுவாசப் பிரச்சனைகள் அதிகரிக்கும் என்றும் உலா வந்த தகவல்கள் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

 

What is the Aphelion phenomenon... Is it just cold now?-Explained by scientists!

 

இந்நிலையில் இவை உண்மையா? அஃபெலியன் நிகழ்வு குறித்து அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த அறிவியல் நிறுவனம் மற்றும் நாசாவை சேர்ந்த விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர். இது குறித்து விஞ்ஞானிகள் கொடுத்த விளக்கத்தில் ''பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள சராசரி தூரம் 9 கோடி கிலோமீட்டர் என்றும், அஃபெலியன் ஃபினாமினன் நிகழ்வு காலத்தில் இந்த தூரமானது 15 கோடியே 20 லட்சம் கிலோ மீட்டர் என்று அதிகரிக்கும் என்றும், இதனால் மனிதர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்படும் என்றும் குறுஞ்செய்தி ஒன்று வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது முற்றிலும் போலியான செய்தி. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள சராசரி தூரம் 150 மில்லியன் கிலோமீட்டர். இதுதான் உண்மை. அஃபெலியன் ஃபினாமினன் நிகழ்வு காலத்தில் சூரியனிடமிருந்து பூமி 152 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும். அதாவது 2 மில்லியன் கிலோமீட்டர் தான் வித்தியாசம். இந்த வித்தியாசம் மனிதர்களுக்கு எந்த உடல் உபாதைகளையும் ஏற்படுத்தாது'' என விளக்கமளித்துள்ளனர் விஞ்ஞானிகள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கிய வெயிலின் தாக்கம்; அறநிலையத்துறை வெளியிட்ட குளுகுளு அறிவிப்பு

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Free Water Butter in 48 Temples

வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள 48 கோயில்களில் இலவச நீர் மோர் வழங்கும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வரும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தற்போதே கோடை காலத்திற்கான வெயிலின் தாக்கம் தொடங்கியுள்ளதால், பல இடங்களில் தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பாக தண்ணீர் பந்தல், நீர் மோர் பந்தல் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க தமிழக அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள 48 முதல்நிலை கோவில்களில் நாளை முதல் நீர்மோர் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதனையொட்டி நாளை சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இலவச நீர்மோர் வழங்கும் திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்க இருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story

17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Chance of rain in 17 districts

நேற்று முன்தினம் புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் சாரல் மழை பொழிந்த நிலையில் இன்று தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பின்படி விழுப்புரம், அரியலூர், கடலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி ஆகிய 17 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.