உலகை அச்சுறுத்திவரும் கரோனாவிற்கு எதிராக, மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவருகின்றன. இந்தநிலையில் அண்மையில் அமெரிக்க அரசு, 100க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்யும் பெரு நிறுவனங்களின் ஊழியர்கள், ஜனவரி 4ஆம் தேதிக்குள் கட்டாயமாக கரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால் வாரவாரம் கரோனா பரிசோதனை செய்துகொண்டு அதன் முடிவை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
அமெரிக்க அரசின் இந்த உத்தரவு 84 மில்லியன் ஊழியர்களுக்குப் பொருந்தும் என்ற நிலையில், சில மாகாணங்களும் பெருநிறுவனங்களும் அரசின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தன. மேலும் வழக்கு விசாரணையின்போது அரசு தனது எல்லையை மீறுவதாகவும் வாதிட்டனர்.
இதன்தொடர்ச்சியாக அமெரிக்க பெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றம், அமெரிக்க அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.