Skip to main content

ஐக்கிய அரபு அமீரகம் மீது ட்ரோன் தாக்குதல்!

Published on 17/01/2022 | Edited on 17/01/2022

 

uae

 

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியின் முசாஃபா பகுதியில், எண்ணெய் நிறுவனம் ஒன்றின் சேமிப்பு கிடங்கு அருகே மூன்று எரிபொருள் டேங்கர் லாரிகள் வெடித்துச் சிதறியுள்ளது. அதேபோல் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமான பகுதியில் தீ பற்றி எரிந்துள்ளது. இதனையடுத்து இரண்டு இடங்களிலும் ஆய்வு செய்த அந்நாட்டு காவல்துறையினர், சிறிய விமானத்தின் பாகங்களை கண்டெடுத்துள்ளதாகவும், அவை ட்ரோன்களின் பாகங்களாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் அந்த ட்ரோன்களின் மூலமே டேங்கர் லாரிகள் வெடிக்கச் செய்யப்பட்டிருக்கலாம் எனவும், விமான நிலையத்தின் கட்டுமான பகுதியில் தீ பற்றவைக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் ஹவுதி அமைப்பு, ஐக்கிய அரபு அமீரகத்தில் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், அதுதொடர்பான தகவல்களை சில மணிநேரங்களில் அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

 

இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஹவுதி அமைப்பே ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியிருப்பதாக கருதப்படுகிறது. ஏமன் நாட்டில் அதிபர் அப்தரபு மன்சூர் ஹாடி தலைமையிலான அரசுப் படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் மோதல் நடந்துவருகிறது. இந்த மோதலில் அரசுப் படைகளுக்கு ஆதரவாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் படைகள் ஹவுதி அமைப்புக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனையடுத்து ஹவுதி அமைப்பு, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தை குறிவைத்து தாக்குதல்களை நிகழ்த்திவருகிறது. ஹவுதி அமைப்புக்கு ஈரான் ஆதரவளித்துவருவது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏமன் மீது அமெரிக்கா, இங்கிலாந்து அதிரடி தாக்குதல்

Published on 12/01/2024 | Edited on 12/01/2024
US,UK incident on Yemen

மத்திய கிழக்கின் செங்கடல் வழியாக ஆப்பிரிக்கா, ஐரோப்பா நோக்கி பயணிக்கும் கப்பல்களுக்கு அடிக்கடி அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு வருகின்றன. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க போர்க் கப்பல்கள் அந்த பகுதிக்கு வந்துள்ளதுதான் இதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது. ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் பல்வேறு தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ட்ரோன்களை பயன்படுத்தி கப்பல்களைத் தாக்குவது தொடர் கதையாகி வருகிறது.

இந்நிலையில் ஏமன் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்தியுள்ளன. ஹவுதி கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து இரு நாடுகளும் தாக்குதல் நடத்துவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. செங்கடல் பகுதியில் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதற்குப் பதிலடியாக இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. ஈரான்  ஆதரவு  பெற்ற ஹவுதி இயக்கம் ஏமனிலும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ஏமன் நாட்டின் தலைநகரான சனா, அல் ஹுதைதா, சத்தா, தாமர் ஆகிய நகரங்களின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. விமானம் மற்றும் கடற்படைகள் மூலம் ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆயுதக் கிடங்குகள் உள்ளிட்ட 12 மையங்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற்று வருகிறது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் இந்த தாக்குதலுக்கு 10க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தேவைப்பட்டால் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்துவோம் எனவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் இந்த தாக்குதலால் காசாவில் நடக்கும் போர் தீவிரமடையும் எனவும் அஞ்சப்படுகிறது. 

Next Story

“நீதி மறைந்து நிர்வாணமாக நிற்கிறது” - அரபு மண்ணிலிருந்து ஓங்கி ஒலிக்கும் குரல்கள்

Published on 22/07/2023 | Edited on 22/07/2023

 

Indians working in Arab countries have condemned the Manipur issue

 

மணிப்பூர் சம்பவத்தால் நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் போராட்டக் குரல்கள் கேட்கத் தொடங்கி இப்போது கடல்கடந்தும் ‘சேவ் ஃபார் மணிப்பூர்’ என்று கண்ணீரோடு போராட்டக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

 

குவைத் நாட்டிற்கு பிழைக்கச் சென்ற இந்தியர்கள் ஓரிடத்தில் ஒன்று கூடி பல்வேறு வாசகங்களுடன் கூடிய பதாகைகள் ஏந்தித் தங்கள் கண்டனக் குரல்களை ஓங்கி ஒலித்துள்ளனர்.

 

“இந்தியப் பொருளாதாரத்தை முன்னேற்றக் கடல் கடந்து வந்துள்ளோம். ஆனால் இந்தியாவில், மணிப்பூர் சம்பவத்தால் இந்திய தேசமே தலைகுனிந்து நிற்கிறது. நீதி மறைந்து நிர்வாணமாக நிற்கிறது. பழங்குடியினப் பெண் குடியரசுத் தலைவராக இருந்தும் மௌனம் காப்பது ஏன் என்று நம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.இப்படி ஒரு நிலை நடந்திருப்பது வேதனையாக உள்ளது. 70 நாட்களுக்குப் பிறகு வந்த காணொளியிலேயே இப்படி நடந்திருக்கிறது என்றால் 70 நாளில் வேறு என்னவெல்லாம் நடந்திருக்கும் என்பதை ஆய்வு செய்ய வேண்டும். நாங்கள் சாதி, மதம் இல்லாமல் இந்தியனாக ஒற்றுமையாக நிற்கிறோம். இதே போல உலகமெங்கும் உள்ள இந்தியர் ஒன்று கூடி தீர்வு காண வேண்டும். இதை வெறுமன 3 பேரை கைது செய்து மறைத்துவிட நினைக்கிறார்கள்” என்றனர். மேலும், ‘சேவ் பார் மணிப்பூர்’ என்று  உரக்க குரல் எழுப்பியும் உள்ளனர்.