UAE PRINCES

ஐக்கிய அரபுஅமீரகத்தின்(யுஏஇ) துணைத் தலைவரும், பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் மகள்ஷேக் லதிபா. இவர் அந்தநாட்டுஇளவரசிகளுள் ஒருவர். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு பதின்பருவத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில்இருந்து வெளியேற முயன்று சிக்கிக் கொண்டார்.

Advertisment

இதன்பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு, மீண்டும் அங்கிருந்து வெளியேற முயன்றஅவரை, இந்திய-ஐக்கிய அரபுபடைகள்கண்டுபிடித்துமீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கே கொண்டு சென்றனர். அதன்பிறகு அவர் பொதுவெளியில்தோன்றவில்லை.

இந்த நிலையில்அவர் பகிர்ந்த வீடீயோக்களை பிபிசிநிறுவனம் ஒளிபரப்பியுள்ளது. இந்த வீடியோக்களைஅவர், ரகசியமாகப் படம்பிடித்ததாகவும், அவரதுநண்பர் மூலம் தங்களுக்குக் கிடைத்ததாகவும் பிபிசிகூறியுள்ளது.ஷேக் லதிபாஅந்த வீடியோவில்,நான் பணயக் கைதியாக இருக்கிறேன். இந்த வில்லா சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. வீட்டிற்குவெளியே ஐந்து போலீஸ்காரர்களும், உள்ளே இரண்டு பெண் போலீஸாரும் உள்ளனர். ஒவ்வொரு நாளும் நான்,எனது பாதுகாப்பு மற்றும் எனது வாழ்க்கையைப் பற்றி கவலைப்படுகிறேன். இந்தச் சிறை வில்லாவில் நான் பணயக் கைதியாக இருக்க விரும்பவில்லை. நான் சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.

Advertisment

தந்தை பிரதமராகஇருக்கும்நாட்டில், பணயக் கைதியாக இருப்பதாக மகள் கூறியுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.