![Two wheeler theft using bulldozer!](http://image.nakkheeran.in/cdn/farfuture/pimoJ8GTv7r1uJA1fglMAU64d7ekEJ0aQpj6v4usbf4/1634299555/sites/default/files/inline-images/cctv44333.jpg)
ஆஸ்திரேலியாவில் புல்டோசரைப் பயன்படுத்தி இருசக்கர வாகனங்களைத் திருடிய நபரை விரட்டிப் பிடித்து காவல்துறையினர் கைது செய்தனர்.
ஆஸ்திரேலியா நாட்டின் பிரிஸ்பேன் நகரில் 41 வயதான டின் மோர் என்ற நபர், அதிகாலையில் புல்டோசரைக் கொண்டு வந்து இருசக்கர வாகன கடையின் கண்ணாடிகளை உடைத்து இரண்டு இருசக்கர வாகனங்களைத் திருடிச் சென்றார். இதுகுறித்து தகவலறிந்த பிரிஸ்பேன் காவல்துறையினர், அவரைப் பிடிக்க விரட்டிச் சென்றனர். அப்போது, சாலைகளிலிருந்து விலகி ரயில் பாதையில் புல்டோசரை ஓட்டிச் சென்று தப்பிச் செல்ல முயன்றார். எனினும், காவல்துறையினர் அவரை விரட்டிப் பிடித்து கைதுசெய்தனர். பின்னர், அவரை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த திருட்டு சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோவையையும் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.