வாட்ஸ் அப் செயலி முடக்கத்தால் ஒரே இரவில் 7 கோடி பேர் புதிதாக டெலிகிராம் பயன்படுத்தியது தற்போது தெரியவந்துள்ளது.
பேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ் அப், இன்ஸ்டாகிரம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் கடந்த 4ம் தேதி நள்ளிரவு திடீரென முடங்கியது. இரவில் ஏற்பட்ட பிரச்சனை அதிகாலை வரை தொடர்ந்தது. நீண்ட முயற்சிக்கு பின்னர் அதிகாலை 5 மணி அளவில் இந்த குறிப்பிட்ட பக்கங்கள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பேஸ்புக் நிறுவனர் மார்க், இந்த இடையூறுக்கு பயனாளர்களிடம் மன்னிப்பு கேட்பதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அந்த குறிப்பிட்ட இரவில் மட்டும் புதிதாக 7 கோடி பேர் டெலிகிராம் ஆப்-ஐ பதிவிறக்கம் செய்துள்ளதாக அந்நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது. இதற்கிடையே அந்த 4ம் தேதி இரவு மட்டும் பேஸ்புக் நிறுவனத்துக்கு 52 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.