ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்துள்ள தலிபான்கள், அங்கு தங்கள் இடைக்கால அரசை நிறுவியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக தலிபான்கள், பெண்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க தொடங்கியுள்ளன. ஏற்கனவே பல்கலைக்கழகங்களில் பெண்கள் எந்த உடை அணியவேண்டும் என்பதற்கு கட்டுப்பாடுகள் விதித்த தலிபான்கள், தற்போது பெண் பத்திரிகையாளர்களுக்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
நேற்று ஆப்கானிஸ்தானின் நல்லொழுக்கத்தை ஊக்குவித்தலுக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், தொலைக்காட்சி திரையில் தோன்றும் பெண் ஊடகவியலாளர்களை ஹிஜாப்களை அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் பெண்கள் நடித்த நாடகங்களை ஒளிபரப்பவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் முகமது நபி அல்லது பிற மரியாதைக்குரிய நபர்கள் காட்டப்படும் திரைப்படங்கள் அல்லது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவும் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, இஸ்லாமிய மற்றும் ஆப்கானிய மதிப்புகளுக்கு எதிரான நிகழ்ச்சிகள் மற்றும் படங்களையும் தடை செய்துள்ளனர்.