
இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பது மிகவும் அவசியமானது ஐக்கிய மக்கள் கட்சி நம்புவதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். எனவே, பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தவும், அரசாங்கத்தின் பதவிகள் எதையும் எதிர்பார்க்காமல் ஆதரவு அளிப்பதாக சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.
ரணிலின் ஐக்கிய மக்கள் ஆட்சி மக்கள் சக்தியின் கொள்கைகளுக்கு எதிராக அமைந்தால், ஆதரவு திரும்பப் பெறப்படும் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ரணில் பிரதமராக பதவியேற்ற போது, எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது திடீரென ஆதரவு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், இலங்கையில் இரவு 08.00 PM மணி முதல் காலை 05.00 AM மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.