Skip to main content

குறைந்த அளவே பாதுகாப்பு - 'சீரம்' தடுப்பூசிகளைத் திரும்பப்பெற அறிவுறுத்தும் தென் ஆப்பிரிக்கா!

Published on 16/02/2021 | Edited on 16/02/2021

 

serum institue of india

 

கரோனா வைரஸை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் தடுப்பூசியைத் தயாரித்துள்ளன. அதேபோல் இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும், மருந்து உற்பத்தி நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவும் இணைந்து தடுப்பூசி ஒன்றைத் தயாரித்தது. இந்தியாவில், அந்த தடுப்பூசியை ‘கோவிஷீல்ட்’ என்ற பெயரில், சீரம் நிறுவனம், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து தயாரித்தது.

 

இதன்பிறகு சீரம் நிறுவனத்தின் ஒரு மில்லியன் தடுப்பூசிகளை தென் ஆப்பிரிக்கா வாங்கியதோடு, அத்தடுப்பூசிகளையும் பரிசோதித்தது. அதனைத் தொடர்ந்து அந்நாட்டு அரசு, தங்கள் நாட்டில் பரவிவரும் மரபணு மாற்றமடைந்த புதியவகை கரோனாவிற்கு எதிராக, சீரம் தடுப்பூசிகள் குறைந்த அளவு பாதுகாப்பே வழங்குவதாகக் கூறி, அத்தடுப்பூசிகளை செலுத்துவதை நிறுத்தி வைத்தது.

 

இந்தநிலையில் சீரம் நிறுவனத்திடம், தாங்கள் வாங்கிய தடுப்பூசிகளை திரும்ப எடுத்துக் கொள்ளுமாறு தென் ஆப்பிரிக்கா கூறியுள்ளது. இதுதொடர்பாக சீரம் நிறுவனம் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்