Skip to main content

”பாகிஸ்தானுக்கு சொந்தமானது காஷ்மீர்”- பல்டி அடித்த பாக் வீரர் அப்ரிடி

Published on 15/11/2018 | Edited on 15/11/2018
afridi


சமீபத்தில்தான் பாகிஸ்தானின் பிரதமராக பாக் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பதவி ஏற்றுள்ளார். இருந்தாலும் பாகிஸ்தான் அரசியல் குழப்பங்கள் இன்றளவும் தீர்ந்தபாடில்லை. இம்ரான் கான் பிரதமராக வந்தபின்பும், காஷ்மீர் பிரச்சினை குறித்த தெளிவான பார்வை இல்லை. இதனால், தீர்க்கமுடியாத பிரச்சினையாக காஷ்மீர் இருந்து வருகிறது. மேலும் தீவிரவாத குழுக்களும் பாகிஸ்தானில் சுதந்திரமாகச் செயல்பட்டு வருகின்றன. தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுறுவ அதற்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது இந்திய இராணுவம். 
 

இந்நிலையில் இங்கிலாந்து மாணவர்கள் நாடாளுமன்றத்தில் பேசியுள்ள பாக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சகித் அஃப்ரிடி, “ பாகிஸ்தானுக்கும் காஷ்மீர் வேண்டாம், இந்தியாவுக்கும் காஷ்மீர் வேண்டாம். பாகிஸ்தானால் நான்கு மாநிலங்களையே சமாளிக்க  முடியவில்லை அதேபோல அதை இந்தியாவுக்கு தர வேண்டாம். அந்த மாநிலத்தை சுதந்திரமாக விட்டுவிடுங்கள். அவர்களுக்கு தேவைப்படுவது மனிதநேயம்தான். அந்த மக்கள் எதிர்பார்பது மனிதநேயம்தான். மக்கள் நாள்தோறும் உயிரிழந்துவருவது வேதனையாக இருக்கிறது. இந்து, முஸ்ஸிம் என எந்தச் சமூகத்தில் உயிரிழப்புகள் நேரிட்டாலும் அது வேதனைதான்” என்று தெரிவித்தார். இதற்கு முன்பாக கடந்த எப்ரல் மாதத்தில் கூட காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை ட்விட்டரில் கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

பின்னர் இந்த கருத்து சர்ச்சையானதை தொடர்ந்து அஃப்ரிடி தனது ட்விட்டரில், காஷ்மீர் விவகராம் இன்னும் தீர்க்கப்படவில்லை. அங்கு நடக்கும் ஒவ்வொரு போராட்டத்துக்கும் நான் உள்பட அனைத்து பாகிஸ்தானியர்களின் ஆதரவு உண்டு. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது” என்று பதிவிட்டிருந்தார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது

Published on 09/05/2023 | Edited on 09/05/2023

 

pakistan former prime minister imran khan arrested inciden

 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் இன்று (09.05.2023) இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணை ஒன்றுக்கு ஆஜராக வந்த நிலையில் உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியில் வைத்து இம்ரான் கானை பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினர் அதிரடியாக கைது செய்தனர்.

 

பாகிஸ்தான் ராணுவம் குறித்து அவதூறாகப் பேசியது உட்பட பல்வேறு வழக்குகள் இம்ரான் கான் மீது பதிவு செய்யப்பட்டு ஏற்கனவே நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இந்த கைது சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சில மாதங்களுக்கு முன்பே, இம்ரான் கானை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அப்போது நாடு முழுவதும் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து அவரை கைது செய்யும் முடிவானது தற்காலிகமாக  நிறுத்தி வைக்கப்பட்டு  இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

தற்போது இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது கட்சியைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் பலவேறு இடங்களிலும் அவரது கைதுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அங்கு சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கான் கைது சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் பதற்றமான சூழலையும் ஏற்படுத்தி உள்ளது. 

 

 

Next Story

ஐஎஸ்ஐ தலைவர் விவகாரம்: முடிவுக்கு வரும் பாக். பிரதமர் - இராணுவ தளபதி மோதல்? 

Published on 14/10/2021 | Edited on 14/10/2021

 

imran khan

 

பாகிஸ்தான் உளவு பிரிவான ஐ.எஸ்.ஐ.யின் தலைவராக ஃபைஸ் ஹமீத் இருந்துவந்தார். இந்தநிலையில், அவரின் பதவிக்காலம் நிறைவடைந்ததையொட்டி, நதீம் அகமது அஞ்சும் என்பவர் ஐஎஸ்ஐயின் புதிய தலைவராக நியமிக்கப்படுவதாக பாகிஸ்தான் இராணுவம் கடந்த வாரம் அறிவித்தது.

 

இருப்பினும் ஐ.எஸ்.ஐ. தலைவராக நதீம் அகமது அஞ்சும் என்பவர் நியமிக்கப்பட்டதற்கான அறிவிப்பு பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்திலிருந்து வரவில்லை. இதனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், சக்தி வாய்ந்தவராக கருதப்படும் பாகிஸ்தானின் இராணுவ தளபதி கமர் ஜாவேத் பஜ்வாவுக்கும் ஐ.எஸ்.ஐ. தலைவரை நியமிக்கும் விவகாரத்தில் மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

 

மேலும், அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையின் காரணமாக, தற்போது ஐ.எஸ்.ஐ. தலைவராக இருக்கும் ஃபைஸ் ஹமீதே அப்பதவியில் தொடர வேண்டும் என  இம்ரான் கான் விரும்புவதாகவும் அந்த தகவல்கள் தெரிவித்தன. இதனால் பாகிஸ்தான் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

 

udanpirape

 

இந்தச் சூழ்நிலையில் பிரதமர் இம்ரான் கானும், இராணுவ தளபதி கமர் ஜாவேத் பஜ்வாவும் கடந்த திங்கட்கிழமை (11.10.2021) சந்தித்துப் பேசினர். இந்தநிலையில், பாகிஸ்தானின் தகவல்துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி, "புதிய ஐ.எஸ்.ஐ. டிஜி நியமனம் குறித்து பிரதமருக்கும் ராணுவ தளபதிக்கும் இடையிலான ஆலோசனைகள் நிறைவடைந்துவிட்டது. புதிய நியமனத்திற்கான நடைமுறை தொடங்கிவிட்டது" என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

இதன்மூலம் பிரதமர் இம்ரான்கானுக்கும், இராணுவ தளபதிக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வந்துள்ளதாக கருதப்படுகிறது.