இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. போராட்டத்தின் பலனாக ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அதனைத்தொடர்ந்து குருநாகல்லில் உள்ள மஹிந்த ராஜபக்சேவின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இந்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. அதேபோல் ராஜபக்சேவின் மருமகள் ஹெலிகாப்டரில் குடும்பத்தினருடன் தப்பியோடும் காட்சிகளும் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் திருகோணமலையில் உள்ள கடற்படை முகாமில் மஹிந்த ராஜபக்சே பாதுகாப்பாக இருப்பதாகவும் விரைவில் வெளிநாடு தப்பி செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் முன்னாள் பிரதமர் என்ற முறையில் மஹிந்த ராஜபக்சேவை பாதுகாப்பது அவசியம் என்று இலங்கை பாதுகாப்புத்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் திரிகோணமலை கடற்படையிலிருந்து ராஜபக்சே வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பலாலி என்ற இடத்தில் உள்ள மறைவிடத்திற்கு பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் மஹிந்த ராஜபக்சே சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.