அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 93வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, இந்திய நேரப்படி இன்று (26/04/2021) காலை 06.30 மணிக்கு தொடங்கியது.
சிறந்த திரைக்கதைக்கான விருதை எமரால்ட் ஃபென்னல் பெற்றார்; திரைப்படம்: 'PROMISING YOUNG WOMAN'.
சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை கிறிஸ்டோபர் - ஃப்ளோரியன் ஆகியோர் பெற்றனர்; திரைப்படம்: 'THE FATHER'.
சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதை டென்மார்க்கின் 'ANOTHER ROUND' பெற்றது.
சிறந்த துணை நடிகை - டேனியல் கல்லூயா; திரைப்படம்: 'JUDAS AND THE BLACK MESSIAH'.
சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரத்திற்கான விருதை செர்ஜியோ லோபஸ், மியா நியல் - ஜாமிகா வில்சன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 'MA RAINEY'S BLACK BOTTOM' என்ற திரைப்படத்துக்காக மூன்று பேரும் சிறந்த சிகையலங்கார விருதைப் பெற்றனர்.
சிறந்த இயக்குநருக்கான விருதை சீனாவைச் சேர்ந்த பெண் இயக்குநர் க்ளோயி சாவ் பெற்றார்; திரைப்படம்: 'NOMADLAND'. சிறந்த இயக்குநருக்கான விருது வென்ற இரண்டாவது பெண் இயக்குநர் என்ற பெருமையை க்ளோயி சாவ் பெற்றார்.
சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதை ஆன்ரோத் பெற்றார்; திரைப்படம்: 'MA RAINEY'S BLACK BOTTOM'.
சிறந்த குறும்படத்திற்கான விருதை ட்ராவன் - மார்ட்டின் பெற்றுக்கொண்டனர்; குறும்படம்: 'TWO DISTANT STRANGERS'.
சிறந்த ஒலிக்கான விருதை 'SOUND OF METAL' திரைப்படத்துக்காக ஐந்து பேர் பெற்றுக்கொண்டனர். இந்த திரைப்படத்திற்காக நிக்கோலஸ், ஜெய்ம், மிச்செலி, கார்லோஸ், பிலிப் ஆகியோர் விருது பெற்றனர்.
சிறந்த படத்தொகுப்புக்கான விருதை 'SOUND OF METAL' படத்துக்காக மிக்கேல் நீல்சன் பெற்றுக்கொண்டார். சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான விருதை 'SOUL' என்ற திரைப்படத்துக்காக பீட் டாக்டர், டானா முர்ரே இருவரும் பெற்றுக்கொண்டனர்.
சிறந்த இசைக்கான விருதை 'SOUL' திரைப்படத்திற்காக ட்ரண்ட் ரெஜ்னார் - ரோஸ் - ஜான் பாட்டீஸ் ஆகியோர் பெற்றனர்.
பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் 'TENET' திரைப்படம் சிறந்த விஷ்வல் எஃபெக்ட்ஸ் விருதை வென்றது.
சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதை 'MANK' திரைப்படம் தட்டிச் சென்றது.
சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை 'NOMADLAND' படத்தில் நடித்த பிரான்சஸ் மெக்டோர்மெண்ட் பெற்றார். அமெரிக்காவைச் சேர்ந்த பிரான்சஸ் மெக்டோர்மெண்ட் மூன்றாவது முறையாக ஆஸ்கர் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை 'THE FATHER' திரைப்படத்தில் நடித்த ஆண்டனி ஹாப்கின்ஸ் பெற்றார்.