Published on 04/07/2022 | Edited on 04/07/2022
வெனிஸ் நகருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் நுழைவுக் கட்டணம் வசூலிக்க நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இத்தாலியில் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள வெனிஸ் நகரம், 100- க்கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கியது. பாரம்பரிய கட்டடங்கள் மற்றும் பண்பாடு கொண்ட நகரமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட வெனிஸ் நகரம், உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வெனிசுலாவுக்கு வந்து செல்கின்றன.
இந்த நிலையில், அதிகளவில் சுற்றுலாவைச் சமாளிக்கும் முயற்சியாக, வரும் 2023- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வெனிஸ் நகருக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் நுழைவுக் கட்டணம் வசூலிக்க அந்நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் நுழைவுக் கட்டணம் செலுத்த தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.