Published on 25/11/2021 | Edited on 25/11/2021
உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளை கரோனா பாதிப்பு மீண்டும் ஆட்டிவைக்கத் தொடங்கியுள்ளது. அதேபோல் தென் ஆப்பிரிக்காவிலும் அண்மைக்காலமாக கரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது.
இந்தநிலையில் தற்போது அந்தநாட்டில், பல்வேறு மரபணு பிறழ்வுகளைக் கொண்ட புதிய வகை கரோனா திரிபை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக அந்தநாட்டின் வைராலஜிஸ்ட் துலியோ டி ஒலிவேரா, துரதிர்ஷ்டவசமாக, தென்னாப்பிரிக்காவில் ஒரு புதிய கரோனா திரிபை கண்டறிந்துள்ளோம். இது கவலைக்குரியது" எனக் கூறியுள்ளார்.