Skip to main content

கூண்டில் அடைபட்ட மல்லிகா ஷராவத் !!!

Published on 15/05/2018 | Edited on 15/05/2018

71 வது கேன்ஸ் திரைப்படவிழா நடைபெற்று வருகிறது. இதில் இந்திய நடிகைகள் கங்கனா ரனாவத், சோனம் கபூர், ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோனே என்று அனைவரும் சிவப்பு கம்பளத்தில் வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். ஆனால் மல்லிகா ஷராவாத் மட்டும் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியளித்தார். சிவப்பு கம்பளத்தில் வராமல் அதற்கு பக்கத்தில் ஒரு கூண்டில் அடைபட்டிருந்தார்.

 

Mallika Sherawat Caged In Cannes for a Cause

 

இதனைக்கண்ட ரசிகர்களும், பத்திரிகையாளர்களும் ஏன் இவ்வாறு கூண்டில் அடைபட்டுள்ளீர்கள் என்று கேட்டதற்கு மல்லிகா ஷராவத் "நான் ஒன்பதாவது முறையாக கேன்ஸ் திரைப்படவிழாவிற்கு வந்திருக்கிறேன். சிறுமிகள் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுவதை தடுக்கத்தான் இதுபோன்ற விழிப்புணர்வில் ஈடுபட்டுள்ளேன். இந்த விழிப்புணர்வு இந்திய சிறுமிகளுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக உலகில் உள்ள அனைத்து சிறுமிகளுக்கும்தான். சிறுமிகள்படும் அவஸ்த்தையை இந்த 12x8 அறைக்குள் இருக்கும்பொழுது நான் உணர்கிறேன். பெண்கள் ஒவ்வொரு நிமிடமும் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர், அதனால் என்னால் முடிந்த அளவிற்கு  தற்போது குரல் எழுப்பியுள்ளேன். கூடிய விரைவில் இதற்கான தீர்வு வரவேண்டும் " என்று கூறினார்.

 

ஏற்கனவே மல்லிகா ஷராவத் ஒரு அரசுசாரா தொண்டு நிறுவனத்திற்கு தூதுவராகவும் இருந்துவருகிறார். தற்போது திரைப்படவிழாவில் கேன்ஸ் கூண்டில் 12 மணிநேரம் உள்ளே இருந்து தனது விழிப்புணர்வு நிகழ்வை நடத்தியுள்ளார்.  

சார்ந்த செய்திகள்

Next Story

“அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன்” - நினைவலைகளைப் பகிர்ந்த சேரன்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Cheran shared his memories about ilayaraja

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கனெக்ட் மீடியா, பி.கே. ப்ரைம் புரடக்‌ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இளையராஜா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், கமல்ஹாசன், தனுஷ், இளையராஜா, பாரதிராஜா, வெற்றிமாறன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் தனுஷ் புகைப்படம் கொண்ட போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார். 

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்குவதற்கு பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சேரன், தன்னுடைய நினைவலைகளைப் பகிரிந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, “சின்ன வயசுல ஊர்ல நாடகம் போட்டா முதல்ல போடுற பாட்டு மச்சானை பாத்தீங்களா தான்.. படம் அன்னக்கிளி. அப்போதான் இளையராசான்னு பேரை கேக்கிறேன். புதுப்பய பாட்டு போட்டிருக்கான்னு எங்க ஊரு பெரியவங்க சொல்றாங்க.

அப்பறம் கறுப்பு வெள்ளைல போட்டோ பாக்குறேன். ஒருத்தர் மீசை இல்லாம ஹிப்பி ஸ்டைல், பாபி காலர் சட்டைல அழகா சிரிக்கிறார். அவர் மேல பிரியம் வருது. (அவர்கூட பின்னாளில் பணிபுரிய போறேன்னு அப்போ தெரியாது). எனக்கு பிடிச்ச சிவாஜிக்கு பாட்டு போடுறாரு. தியாகம் படம். தேன் மல்லிப்பூவேன்னு... படம் வெறித்தனமா ஓடுது. ராசா பாட்டுத்தான் காரணம்னு சொல்றாக. அந்த ராசா அப்போ எப்படிலாம் இருந்திருப்பார்னு 2025ல பாக்க போறோம். சினிமா மட்டுமே பார்வையாளனுக்கு நினைக்க முடியாத ஆச்சரியங்களை தரும். இளையராஜா அவர்களின் வாழ்க்கை சிறப்பை படமாக்க முயன்றிருக்கும் தனுஷ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். ஒரு சாமானியனின் வெற்றியாய் வளரட்டும். இளையராஜா வரலாறு...” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story

“அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்!”- ரஜினிகாந்த்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Rajinikanth has said that he will not answer political questions

வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படமான வேட்டையன் படப்பிடிப்பு, ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார். 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

“படப்பிடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது..” என்று மீடியாக்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  “அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பினார்.