பயனாளர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் 15 புதிய செயலிகள் குறித்த தகவல்களை பிரிட்டிஷ் சைபர் பாதுகாப்பு அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.

malicious apps in android

Advertisment

Advertisment

அண்மைக் காலங்களாக தகவல் திருட்டு மற்றும் பாதுகாப்பு காரணங்களால் பல செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரிட்டிஷ் சைபர் பாதுகாப்பு அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, புதிதாக கூகுள் ப்ளே ஸ்டோரில் சேர்க்கப்பட்ட 15 செயலிகள் ஆபத்தானவை என கண்டறியப்பட்டுள்ளன. இதுகுறித்து கூகுள் நிறுவனத்திற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள இந்த 15 செயலிகளை பயனாளர்கள் உடனடியாக நீக்கிவிடும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிரச்னைக்குரிய செயலிகள்: Flash On Calls & Messages • Read QR Code • Imagine Magic • Generate Elves • Savexpense • QR Artifact • Find Your Phone : Whistle • Scavenger - - - speed guard • Auto Cut Out Pro • Background Cut Out • Photo Background • ImageProcessing • Background Cut Out New • Auto Cut Out • Auto Cut Out 2019