அமெரிக்க துணை அதிபரும், தமிழ்நாடு வம்சாவளியுமான கமலா ஹாரிஸ், 1.25 மணிநேரம் அமெரிக்க அதிபராகப் பதவி வகித்தார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து அமெரிக்காவின் 46வது அதிபராக ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் கடந்த ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்றார். அதேபோல், இந்தியாவை, குறிப்பாக தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராகப் பதவியேற்றார்.
இந்நிலையில், ஜோ பைடனுக்கு மருத்துவ பரிசோதனை காரணமாக மயக்க மருந்து தரப்பட்டு பரிசோதனை நடைபெற்றது. இதனால் அந்த சிகிச்சை முடியும்வரை தற்காலிகமாகக் கமலா ஹாரிஸுக்கு அதிபர் பதவி கொடுக்கப்பட்டு, அதற்கான அதிகாரமும் வழங்கப்பட்டது. 1.25 மணி நேரம் அதிபருக்கான அதிகாரம் வழங்கப்பட்ட நிலையில், துணை அதிபர் கமலா ஹாரிஸ் அதிபர் இருக்கையில் அமரவில்லை. வழக்கமான மருத்துவ பரிசோதனை முடிந்தவுடன் ஜோ பைடன் மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்று பணியைத் தொடங்கினார்.