Skip to main content

இந்திய வீரர்களின் ஹோட்டலுக்கு அருகே மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்திய  ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள்!

Published on 17/11/2021 | Edited on 17/11/2021

 

UGANDA

 

உகாண்டா தலைநகர் கம்பாலாவில், இந்திய பாரா - பேட்மிண்டன் வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் அருகே நேற்று (16.11.2021) தீவிரவாதிகள், இரட்டை மனித வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர். உகாண்டாவின் மத்திய போலீஸ் நிலையத்திற்கும், அந்த நாட்டின் பாராளுமன்றத்திற்கும்  அருகே நடைபெற்ற இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

 

இந்த இரட்டை மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இதற்கிடையே, இந்த தாக்குதலில் இந்திய வீரர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என இந்திய பாரா - பேட்மிண்டன் அணி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதேபோல் தாக்குதல் நடந்த இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் இந்திய அணி வீரர்கள் இருந்ததாகவும் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்திய பாரா - பேட்மிண்டன் அணி, உகாண்டா பாரா - பேட்மிண்டன் சர்வதேச போட்டியில் பங்கேற்க அந்த நாட்டிற்குச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

சம்பளம் தராத அமைச்சர்; சுட்டுக் கொலை செய்த காவலர்

Published on 03/05/2023 | Edited on 03/05/2023

 

uganda labour minister charles engalo incident

 

உகாண்டாவில் அதிபர் யோவேரி முசவேனி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அமைச்சரவையில் தொழிலாளர் துறை அமைச்சராக இருந்து வந்தவர் சார்லஸ் எங்கோலா. மேலும் இவர் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஆவார்.

 

இந்நிலையில் அந்நாட்டின் தலைநகரான கம்பாலா  பகுதியில்  உள்ள அவரது வீட்டில் நேற்று காலை அமைச்சர் சார்லஸ் எங்கோலாவுக்கும் அவரது பாதுகாவலர் ஒருவருக்கும் இடையே வாக்குவாதம்  ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வாக்குவாதத்தால்  மேலும் ஆத்திரம் அடைந்த பாதுகாவலர் திடீரென தான்  வைத்திருந்த துப்பாக்கியால் அமைச்சரை சுட்டுள்ளார். அங்குத் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதும் பாதுகாப்புக்கு இருந்த மற்ற பாதுகாப்பு போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அமைச்சர் சார்லஸ் எங்கோலா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே அமைச்சரைச் சுட்டுக் கொன்ற பாதுகாவலரும் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்ததாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடந்த சில மாதங்களாகப் பாதுகாவலருக்குச் சம்பளம் வழங்கப்படாததால் இது குறித்து பாதுகாவலர் அமைச்சரிடம்  கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டு அவரை சுட்டுக் கொன்று இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளன. அமைச்சர் ஒருவர் தனது பாதுகாப்பாளர் ஒருவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டு மக்களிடையே  சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.