Skip to main content

ஈராக் பிரதமரைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

Published on 07/11/2021 | Edited on 07/11/2021

 

iraq pm

 

ஈராக் நாட்டின் பிரதமராக உள்ள முஸ்தபா அல்-காதிமியின் வீட்டின் மீது இன்று ட்ரோன் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் பிரதமர்  முஸ்தபா அல்-காதிமி காயமின்றி உயிர் தப்பியுள்ளார். அதேநேரத்தில் பிரதமரின் பாதுகாவலர்கள் ஏழு பேர் இந்த ட்ரோன் தாக்குதலில் காயமடைந்துள்ளதாக  ஈராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

முஸ்தபா அல்-காதிமியை கொலை செய்யவே இந்த தாக்குதல் நடைபெற்றதாகத் தெரிவித்துள்ள ஈராக் ராணுவம், இந்த தோல்வியடைந்த முயற்சி தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளையும் பாதுகாப்புப் படைகள் எடுத்து வருவதாகவும் கூறியுள்ளது.

 

ஈராக் பிரதமரைக் குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. அதேநேரத்தில் கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஈரான் ஆதரவு குழுக்கள் பெரிய தோல்வியைச் சந்தித்தன. இதனையடுத்து அக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் தேர்தல் முடிவை ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டம் ஒன்றில் வன்முறை வெடித்தது. இதில்  ஈராக் பாதுகாப்புப் படையினர் மற்றும் ஈரான் ஆதரவு குழுவினர் என இருதரப்பும் துப்பாக்கியால் தாக்கிக் கொண்டனர். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் உயிரிழந்தார்.  ஈராக்  பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பலர் காயமடைந்தனர். இந்த சூழலில் பிரதமரைக் கொல்ல தாக்குதல் நடைபெற்றுள்ளதால், ஈரான் ஆதரவு ஷியா போராளிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘வெள்ளியங்கிரி மலைக்கு செல்வோர் கவனத்திற்கு...’- வனத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Important information for Velliangiri hill travelers

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இத்தகைய சூழலில் சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

Next Story

பாகிஸ்தானில் புதிய பிரதமர் பதவியேற்பு!

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
New Prime Minister sworn in in Pakistan!

பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-என் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. இதனிடையே, பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கானுக்கு, 30 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. மேலும், அவரது மனைவி புஷ்ரா பிபிக்கும் இந்த வழக்குகளில் தொடர்பு இருப்பதாகக் கூறி 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. மேலும், இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு தேர்தலில் போட்டியிடத் தடை விதித்திருந்தது. இதனால், அக்கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சுயேட்சையாகப் போட்டியிட்டனர்.

மொத்தமுள்ள 265 நாடாளுமன்றத் தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 133 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம். இந்தத் தேர்தலில் தெக்ரீக் - இ - இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் 93 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றனர். அதேபோன்று, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி 75 இடங்களைக் கைப்பற்றியது. பிலாவல் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 தொகுதிகளைக் கைப்பற்றியது. இருப்பினும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது.

அதே சமயம் தேர்தல் நடந்து நாட்கள் கடந்த பிறகும் புதிய அரசை அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இத்தகைய சூழலில் தான் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியும், பிலாவல் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியும் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது. அதன்படி நவாஷ் ஷெரீபின் சகோதரரும் முன்னாள் பிரதமருமான ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நீண்ட இழுபறிக்கு பின்னர் இரண்டாவது முறையாக ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் 33வது பிரதமராக இன்று பதவியேற்றுள்ளார்.