Skip to main content

எல்லை மீறும் பாகிஸ்தான்; 50 பேர் உயிரிழப்புக்கு மத்திய அரசு கண்டனம்

Published on 28/12/2018 | Edited on 28/12/2018

 

dcv

 

இந்த ஆண்டு மட்டும் பாகிஸ்தான் படைகள் 1,962 எல்லை தாண்டிய தாக்குதல்களை இந்தியா மீது நடத்தியுள்ளது. இதில் 50 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த 21 மற்றும் 26 ஆம் தேதிகளில் நடைபெற்ற தாக்குதல்களில் இந்திய மக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இறந்துள்ளனர். இதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியை நேரில் அழைத்து இந்திய அரசு தனது கண்டனத்தை தெரிவித்தது.

இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்த ஆண்டு பாகிஸ்தான் படைகள் 1,962 எல்லை தாண்டிய தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் 50 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த 21 மற்றும் 26–ந்தேதிகளில் நடைபெற்ற தாக்குதல்களில் இந்திய மக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இறந்துள்ளனர். இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவலை பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரித்து வருவது குறித்தும், பாகிஸ்தான் ராணுவம் அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவது குறித்தும் நமது வருத்தத்தை தெரிவித்துள்ளோம். பாகிஸ்தான் தனது கட்டுப்பாட்டில் உள்ள எந்த பகுதியிலும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை அனுமதிக்கக்கூடாது என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது' என கூறப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்