
ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் மோடி, ஜெர்மனியில் உள்ள மியூனிக் நகரில் அங்குள்ள இந்திய மக்களுக்கு மத்தியில் உரையாற்றி வருகிறார். அந்த உரையில் அவர் பேசியதாவது ''உயிர்த்துடிப்புள்ள ஜனநாயகம்தான் இந்தியாவின் பெருமை. இந்திய ஜனநாயகத்தின் வரலாற்றில் அவசரநிலை பிரகடனப்படுத்தியது ஒரு கரும்புள்ளி. கலாச்சாரம், பாரம்பரியங்களின் பன்முகத்தன்மை நமது ஜனநாயகத்தைத் துடிப்பானதாக்குகிறது. தற்போது நான்காவது தொழில் புரட்சியில் இந்தியா பின் தங்காமல் உலகை வழி நடத்துகிறது'' என தொடர்ந்து பேசி வருகிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)