Published on 07/06/2022 | Edited on 07/06/2022

இலங்கை தலைநகர் கொழும்புவில் ஆட்டோவில் வந்த நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். நேற்று முன்தினம் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், நேற்றும் கொழும்பு முகத்துவாரம் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது.
இலங்கையில் கடந்த நான்கு நாட்களில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கும், போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் அந்நாட்டு மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.