சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கிண்டி, ஈக்காட்டுதாங்கல், அடையாறு, வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் நுங்கம்பாக்கம். வேளச்சேரி. தரமணி. கொட்டிவாக்கம். மயிலாப்பூர். மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் கே.கே.நகர், சாலிகிராமம், கோடம்பாக்கம், தி.நகர், இராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் மழை பொழிந்து வருகிறது.
ஏற்கனவே தமிழகத்தில் மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் 5 மாவட்டங்களுக்குச் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.