
உலகின் பல்வேறு நாடுகளில் மீண்டும் கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட கரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சிகளை உலக நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன.
அந்தவகையில் கிரீஸ் நாடு, தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு மாதாந்திர அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது. கிரீஸ் நாட்டில், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் அதிகளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் கரோனாவால் இறப்பவர்களில் 10-ல் ஒன்பது பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருந்து வருகின்றனர்.
இதனையடுத்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு, மாதம் மாதம் அபராதம் விதிக்க கிரீஸ் நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.