Skip to main content

'பிரெஞ்சு ஃப்ரைஸ்' ( french fries ) பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்.

Published on 24/09/2018 | Edited on 24/09/2018

 

fr

 

நீங்கள் பிரெஞ்சு ஃப்ரைஸ் (french fries ) பிரியரா. அப்படி இருந்தால் உங்களுக்கு ஒரு அதிர்ச்சியான தகவல். பன்னாட்டு உணவகங்களான கே.எஃப்.சி, மெக்டொனால்ட்ஸ் போன்றவற்றில் பெருமபாலும் வெளிநாடுகளில் இருந்தான் உருளைக்கிரங்குகள் இறக்குமதி செய்யப்பட்டு பிரெஞ்சு ஃப்ரைஸ் தயாரிக்கப்படுகிறது. இதில் அதிர்ச்சியான தகவல் என்னவென்றால்,இதுவரை வந்திருந்த பிரெஞ்சு ஃப்ரைஸின் அளவைவிட இனி வரும் பிரெஞ்சு ஃப்ரைஸின் அளவு சிறிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரெஞ்சு ஃப்ரைஸ் பொறுத்தவரையில் நீளமாக இருக்கும்போதுதான் அதன் ருசி அதிகம். ஆனால் பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் லண்டனில் அதிகமான வறட்சியும் வெயிலும் நிலவுவதால் உருளைக்கிழங்கின் விளைச்சல் குறைந்து உள்ளதாகவும், உருளையின் அளவும் சிறியதாக இருப்பதாகவும், அந்நாட்டு விவசாயிகள் தெரிவித்துள்ளனர். முக்கியமாக பெல்ஜியம் நாட்டின் விருப்பமான உணவு வகைகளில் ஒன்றான பிரெஞ்சு ஃப்ரைஸ், அந்த நாட்டில் அதிகமாக பாதிப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

அயோத்தியில் கேஎஃப்சி உணவகம் வைக்க அனுமதி... ஆனால் ஒரு கண்டிஷன்!

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
Permission to set up a KFC restaurant in Ayodhya and condition

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது.

அப்போது நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு பின்பு, குழந்தை ராமர் சிலை கண் திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. குழந்தை ராமருக்கு பிரதமர் மோடி முதல் பூஜை செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார். இதனையடுத்து கோவில் கருவறை திரைச்சீலை விலக்கப்பட்டு மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் ராமரை வழிபாடு செய்து வருகின்றனர்.

அயோத்தி ராமர் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தரிசிக்க வருவதால், அவர்களின் வசதிக்காக உள்ளூர் முதல் வெளிநாட்டு நிறுவனங்கள் வரை உணவகங்கள் உள்ளிட்ட கடைகள் திறப்பதற்கு அம்மாநில அரசு ஒப்புதல் அளித்து வருகிறது. அதே வேளையில், அந்த கோவிலைச் சுற்றியுள்ள 15 கி.மீ வரை அளவிலான இடத்தை சுற்றி அசைவ உணவகங்கள் விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அயோத்தியில் இருந்து 15 கி.மீ சுற்றளவில் அமைக்கப்படும் பன்னாட்டு நிறுவனமான கேஎஃப்சி உணவகம் போன்ற பன்னாட்டு உணவகத்தில், அசைவ உணவகம் விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த உணவகங்களில் சைவ உணவுப் பட்டியல் மட்டுமே இடம்பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஆறிப்போன ப்ரென்ச் ப்ரைஸ்-மெக்டொனால்ட் ஊழியர் சுட்டுக்கொலை!

Published on 04/08/2022 | Edited on 04/08/2022

 

Cold French Price-McDonald's employee shot

 

 

உலக அளவில் புகழ்பெற்ற பிரபலமான நிறுவனம் 'மெக்டொனால்ட்'. சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட கிளைகள் இந்நிறுவனத்திற்கு உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மெக்டொனால்ட் உணவகத்தின் கிளையில் படுகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சூடாக ப்ரென்ச் ப்ரைஸ் ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்த பெண்மணிக்கு ஆறிப்போன  ப்ரென்ச் ப்ரைஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஏன் உணவு சூடாக இல்லை என மெக்டோனால்ட் ஊழியரிடம் கேட்டுள்ளார் அந்த பெண். அதற்கு கடையின் ஊழியர் கெவின் ஹால்லோ குறும்புத்தனமாக பதில் அளித்ததாகவும் கூறப்படுகிறது. மேலாளரிடம் வேண்டுமென்றால் புகார் செய்யுங்கள் எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்மணியின் மகன் கையிலிருந்த துப்பாக்கியை எடுத்து ஊழியரைச் சுட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்ட மைக்கேல் மார்க்கோனை நியூயார்க் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதற்கு முன்பே 2020 ஆம் ஆண்டு மேத்யூ என்ற நபர் மீது மைக்கேல் மார்க்கோன் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.