
ஆஸ்திரேலியா அரசு சமீபத்தில் புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய சட்டப்படி,கூகுள், ஃபேஸ்புக்உள்ளிட்ட தளங்களில் பயனர்கள் படிக்கும்உள்நாட்டு செய்திகளுக்காக, அந்தத் தளங்கள் உள்நாட்டுசெய்தி நிறுவனங்களுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும். கூகுள்போன்ற தளங்கள், செய்திகளைப் படிக்க விரும்பும் மக்களிலிருந்து வாடிக்கையாளர்களை உருவாக்கிக்கொள்கிறது. எனவே இந்தத் தளங்கள், செய்தி நிறுவனங்களின் ஊடகவியலுக்கு நியாமானதொகையைத் தர வேண்டும் எனஆஸ்திரேலிய அரசு இப்புதிய சட்டத்திற்கான காரணங்களைக் கூறுகிறது.
இதற்குஎதிர்ப்பு தெரிவித்துள்ள கூகுள்ஆஸ்திரேலியாவின் நிர்வாக இயக்குனர், “இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால், கூகுள் சர்ச் வசதியை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை” எனக் கூறியிருந்தார். அதே நேரத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், "இந்த நாட்டில் நீங்கள் செய்யக்கூடிய விஷயங்களுக்கானவிதிமுறைகளை ஆஸ்திரேலியா உருவாக்குகிறது. அதன்படி பணியாற்ற விரும்புபவர்கள் வரலாம். ஆனால் நாங்கள் மிரட்டல்களைக் கண்டுகொள்ள மாட்டோம்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனம், ஃபேஸ்புக்கில் செய்திகளைப் பகிர்வதற்குத் தடை விதித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம், தங்களுக்கும் செய்தி வெளியீட்டாளர்களுக்கும் உள்ள உறவின் தன்மையை ஆஸ்திரேலிய அரசு கொண்டுவரவுள்ள புதிய சட்டம்அங்கீகரிக்கத் தவறிவிட்டதால், இந்த கடினமான முடிவை எடுப்பதாகக் கூறியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)