நாளை (புதன் கிழமை ) பாகிஸ்தானில் தேர்தல் நடைபெறவுள்ளது. பல்வேறு தாக்குதல் சம்பவங்களுக்கு பிறகு நடக்கவிருக்கும் தேர்தல் என்பதால் வாக்கு சாவடிகளில் பாதுக்காப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஜூலை 25-ஆம் தேதி பொதுத்தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் ஜூலை 14-ஆம் தேதி கட்சி தேர்தல் பரப்புரையின் போது தீவிரவாத அமைப்புகளால் வெடிக்க செய்யப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 133 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் அவாமி கட்சியின் பலுகிஸ்தான் வேட்பாளர் மீர் சிராஜ் கொல்லப்பட்டார். அதேபோல் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாப் ஷரீப், அவரது மகள் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பாகிஸ்தானில் நாளை நாடாளுமன்ற தேர்தலும் பஞ்சாப், சிந்து, கைபர் பக்துங்வா, பலுசிஸ்தான் மாகாண சட்டசபை தேர்தலும் ஒரே நேரத்தில் நடக்கவிருக்கிறது. இதன் காரணமாக சுமார் 85ஆயிரம் வாக்கு சாவடிகளில் மொத்தம் 3 லட்சத்து 70 ஆயிரம் பாதுகாப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் தேர்தல் பாதுகாப்பிற்காக இவ்வளவு அதிக ராணுவ வீர்கள் குவிட்கப்பட்டது இதுதான் முதல்முறை என்பதால் ராணுவ ஆதிக்கத்திற்கு மக்கள் தள்ளப்படலாம் என கூறப்படுகிறது. அதேபோல் இப்போது தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்தி ராணுவ புரட்சி ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. இது, பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சம்பவங்களால் அங்கு பெரும் பரபரப்பு நிலை உருவாகியுள்ள நிலையில் நாளை தேர்தல் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.