Published on 30/06/2022 | Edited on 30/06/2022

இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறைக் காரணமாக, மிகக் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுவதால், அதில் பயணிக்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அந்நாட்டில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் விநியோகிக்கப்படுகின்றனர். எனினும், பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை.
இருப்பினும், எரிபொருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் இரவு, பகலாக காத்துக்கிடக்கின்றனர். பலர் வாகனங்களை வரிசையில் நிறுத்திவிட்டு, சாலையோரத்தில் படுத்து உறங்குகின்றனர். தனியார் பேருந்து சேவைகள் முடங்கியுள்ளன.
இதனிடையே, இந்தியாவில் இருந்து ஜூலை மாதம் பெட்ரோல் வந்து சேரும் என்று இலங்கை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.