உலகம் முழுவதும் பரவிவரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசிகளைக் கண்டுபிடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தன. இந்தநிலையில், முதலில் கரோனா பரவல் ஏற்பட்ட நாடான சீனாவும், தற்போது தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளது.
சீனாவின் இந்தத் தடுப்பூசிக்கு தற்போது உலக சுகாதார நிறுவனம், அவசரகால அனுமதியை வழங்கியுள்ளது. இதன்மூலம் உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற 6வது தடுப்பூசியாக சீனாவின் தடுப்பூசி மாறியுள்ளது. தற்போது இந்தத் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ள உலக சுகாதார நிறுவனம், அதனை தனது கோவாக்ஸ் திட்டத்திலும் இணைக்கவுள்ளது.
கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் உலக சுகாதார நிறுவனம், கரோனா தடுப்பூசிகளை வாங்கி ஏழை நாடுகளுக்கு விநியோகித்து வருகிறது. தற்போது சீனாவின் தடுப்பூசியும் அந்தத் திட்டத்தில் இணைக்கப்பட்டால், அத்தடுப்பூசியும் பல்வேறு நாடுகளுக்கு விநியோகிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.